Subscribe Us

Rio Olympic போட்டிகளில் இதுவரை நிகழ்ந்த சில சுவாரஷ்ய விடயங்கள் ..


இம்முறை ஒலிம்பிக் வரலாற்றில் Refugee Olympic Team (ROT) என்ற அணி ஒன்றை International Olympic Committee அறிவித்துள்ளது. இதில் உள் நாட்டு யுத்தங்ககளால் பாதிக்கப்பட்ட கொங்கோ,தென் சூடான், எத்தியோப்பியா மற்றும் சிரியா நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்குபற்றுகின்றனர். இவர்களுக்கான உதவிகளை United Nations Refugee Agency மற்றும் National Olympic Committees (NOCs) என்பன செய்துவருகின்றன.

Julius Yego என்ற Kenya நாட்டு ஈட்டி எறியும் வீரர், தாம் ஈட்டி எறிவதை Internet - Youtube மூலமே கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். இவரே தங்கப்பதக்கத்தை சுவீகரிப்பார் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.


ஹிஜாப் அணிந்த நிலையில் விளையாடிய எகிப்தின் Beach Volleyball மகளிர் அணி பல ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. Beach Volleyball இல் மகளிர் அணி ஒன்று எவ்வாறு பங்குபற்றும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின்னும் ஒரு பெண் இருப்பாள் என்பதை மாற்றி எழுதிய ஹங்கேரியவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை Katinka Hosszu, மகளிருக்கான 400m Individual Medley இல் தங்கப்பதக்கத்தை பெற்றதோடு, 4:26.36 என்ற நேரத்தில் நீந்தி புதிய உலக சாதனையையும் நிலைநாட்டியுள்ளார். இந்த வெற்றிக்கு காரணம் தமது கணவன் தான் என simple ஆக கூறியுள்ளார்.

அவரின் கணவர்தான் பயிற்றுவிப்பாளர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்காவை சேர்ந்த வாள் வீச்சு வீராங்கனை (Fencer) Ibtihaj Hosszu ஹிஜாபுடன் தமது போட்டிகளில் பங்கேற்றி வருபவர். இந்த ஒலிம்பிக் ஆரம்பித்த நாள் தொடக்கம் அமெரிக்க ஊடகங்கள் இவர் அணிந்திருக்கும் ஹிஜாப் பற்றியே அதிக கவனம் செலுத்தி வருகின்றன.

-எம்.டீ.ஆர்-
2016.08.12

Post a Comment

0 Comments