கண்ணெதிரே காணும் உலகை கைபேசி வாயிலாக அதே மாதிரி காட்டி, நிஜத்தில் கண்ணுக்கு தென்படாத கதாபாத்திரங்களையும், உருவங்களையும் கைபேசி திரைகளில் மாயமாக தோன்றவைத்து, அவற்றை வேட்டையாடும் வேட்கையை தூண்டிவிடும் ’போக்கிமோன் கோ’ வீடியோ கேம்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான கைபேசி விளையாட்டாக திகழ்ந்து வருகிறது.
கடந்த மாதம் ஜப்பானில் தொடங்கப்பட்ட போக்கிமோன் கோ விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமான பேர் அடிமையாகி வருகின்றனர்.
இதனால் 15 நாடுகளில் இந்த விளையாட்டைத் தடை செய்துள்ளனர். உலகளவில் அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா, சீனா, ஈரான், மற்றும் கொரியா போன்ற நாடுகளில் போக்கிமோன் கோவுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஒரு மாத முடிவில் போக்கிமோன் கோ சுமார் ரூ.1336 கோடி( 200 மில்லியன் டாலர்)களை உலகம் முழுவதும் சம்பாதித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இது கேண்டி கிரஷ் சோடா சகா, கிளாஷ் ராயல் ஆகிய விளையாட்டுக்கள் வெளியான 30 நாட்களில் சம்பாதித்த தொகையை விட இரு மடங்கு அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ரஷ்யாவின் மாஸ்கோ நகரை சேர்ந்த இவான் மகாரோவ் என்ற பெண் உண்மையான போக்கிமோனால் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக போலீசில் புகார் அளித்து உள்ளார்.இத்தகவலை தொழில்நுட்ப ரீதியாக உண்மையான போக்கி மேன் என்று யாரும் கிடையாது நிச்சயமாக அது ஒரு கார்டூன் தான் ஆனால் அந்த பெண் மெய்நிகர் தோற்றம் கொண்ட மனிதன் தன்னை பாலியல் பாலாத்காரம் செய்து விட்டதாக கூறி உள்ளார்.
அந்த பெண் போக்கிமோன் கோ கொண்டு இருந்தததாகவும் அப்படியே தூங்கி விட்டதாக கூறி உள்ளார்.. பின்னர் அவர் மீது மிக கனமான போக்கிமோன் இருப்பதை பார்த்து விழித்து கொண்டேன் என கூறி உள்ளார்.ஆனால் போக்கிமேன் என்பது மிகவும் சிறியது அதனால் மூச்சு விட திணறினார் என்பதையும் ஏற்றுகொள்ள முடியாது. இதனை ரஷ்ய செய்தி இணையதளம் (Bloknot.ru) ஒன்று செய்தியாக வெளியிட்டு உள்ளது
போக்கிமேன் கோ என்றால் என்ன?
ஜிபிஎஸ் மற்றும் கேமரா தொழில்நுட்பத்துடன் இணைந்து விளையாடும் இந்த ரியாலிட்டி கேமை ஆன் செய்தவுடன் மொபைல் போனின் ஜிபிஎஸ் உடன் இணைந்து விடும். நாம் நிஜத்தில் நகர்ந்தால் அந்த கேமில் நம்முடைய கேரக்டரும் நகரும். சில இடைவெளியில் ‘மான்ஸ்டர்கள்’ எனப்படும் குட்டிச்சாத்தான்கள் இருப்பதாக காண்பிக்கும். அந்த இடத்திற்கு நாம் நடந்து சென்றால் அவற்றை பிடிக்க முடியும். இப்படித் தான் இதை விளையாட வேண்டும்.
விளையாடும் அனைவரும் அந்த கற்பனை உலகிற்கு அழைத்து செல்வது போல் அமைந்துள்ளதால் அனைவரையும் தன் வசப்படுத்தியுள்ளது இந்த போக்கிமோன் கோ. வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் விளையாடி கொண்டே ஏராளமான பணத்தை சம்பாதிக்கும் பொழுதுபோக்காகவும் இது உருவாகி வருகிறது.
ஒரு பயன்பாட்டாளர் (யூஸர்) பெயர் மற்றும் கடவுச் சொல்லுடன் புதிய கணக்கை தொடங்கி இந்த போக்கிமோன் விளையாட்டுக்குள் நுழைந்து விட்டால், நீங்கள் எத்தனை கேரக்டர்களை வேட்டையாடுகிறீர்களோ.., அதற்கேற்ப இந்த கேமில் நீங்கள் பாயின்ட்களை (புள்ளிகள்) பெற முடியும். இப்படி, பாயிண்ட்கள் ஏற,ஏற அடுத்தடுத்த படிநிலைக்கு (லெவல்) நீங்கள் போகலாம். உங்கள் பாக்கெட்டில் பணம் சேர்ந்து கொண்டிருப்பதாக அர்த்தம்.
இப்படி அதிக பாயின்ட்களை பெறும் நபர்கள் தங்களது பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை மற்றவர்களுக்கு நல்ல விலைக்கு விற்கலாம். இதை விலைக்கு வாங்குபவர்கள் எவ்வித வலியும் இல்லாமல் கைவசமுள்ள விலைக்கு வாங்கிய பாயின்ட்களுடன் தங்களது திறமைக்கேற்ப மேலும் பல கேரக்டர்களை தேடி, கண்டுபிடித்து, வேட்டையாடி ஸ்கோரை உயர்த்தி கொள்ளலாம்.
பின்னர், அவர் விரும்பினால் தனது பாயின்ட்களை இன்னொருவருக்கு விற்று விடலாம். இப்படி குதிரை ரேஸ் பைத்தியம்போல் பலரை இந்த போக்கிமோன் கோ பித்தர்களாக அலைய வைத்து வருகிறது. இப்ப்படி, பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை ஏலம் விடுவதற்கான வசதியை ‘இபே’ உள்ளிட்ட இணைய ஏல நிறுவனங்கள் வழிவகுத்து தந்துள்ளன.
’லெவல்-20’ அளவில் உள்ள கணக்குகள் சுமார் ஒருலட்சம் ரூபாய் வரை இங்கு ஏலம் விடப்படுகிறது. இதை பலரும் வாங்கி வருகின்றனர். சமீபத்தில் ஒருவரது கணக்கின் பயன்பாட்டாளர் பெயர் மற்றும் கடவுச் சொல் சுமார் 6.50 லட்சம் ரூபாய் வரை ஏலம் போயுள்ளது.


0 Comments