19 வயது பெண்கள் பிரிவுக்கான கிரிகட் சுற்றுபோட்டியில் மாகாணமட்டத்தில் கற்பிட்டி நிர்மல மாதா சிங்கல மகா வித்தியாலயம் சம்பியனானது 2016க்கான கற்பிட்டி கோட்டமட்ட விளையாட்டுப்போட்டியில் முதலாம் இடத்தினையும் பெற்று புத்தளம் வலயமட்ட விளையாட்டு போட்டியில் முதலாம் இடத்தினையும் பெற்று, வடமேல் மாகாண மட்ட விளையாட்டுப்போட்டியில் முதலாம் இடத்தினைப்பெற்று அகில இலங்கை மட்டத்திற்கு இரண்டாவது முறையாகவும் தெரிவாகியுள்ளது.
இப்போட்டி போபிட்டிய வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இரண்டு நாட்களாக நடைபெற்ற சுற்றுப்போட்டியில் இறுதி போட்டியில் மீகாலேவ தேசிய பாடசாலை அணியை எதிர்த்து விளையாடி வெற்றி பெற்று வடமேல் மாகாணச் சம்பியனாக தெரிவாகியது.
இம்மாணவிகள் அகில இலங்கை மட்டத்திலும் வெற்றி பெற பிரார்திப்பதோடு பங்களித்த மாணவிகளுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைவதுடன் இம்மாணவர்களின் பொறுப்பாசிரியர் பி.எல் சமித்த குமார பிரியதர்சன, பயிற்றுவிப்பாளர் டடிபிள்யூ என் தயான் பீரிசுக்கும் இதற்கு உதவிய ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துகொள்கிறது.
0 Comments