Subscribe Us

header ads

பாரபட்சம் காட்டப்படும் பெரியமடு மண்

கௌரவ வட மாகாண போக்குவரத்து அமைச்சரே! இது உங்களுக்காக...
"தினமும் பழுதடையும் பாவனைக்கு உதவாத பழைய பஸ் சேவை"
மன்னார் மாந்தை மேற்கு பிரதேசம் பெரியமடு கிராமத்தின் சீரற்ற CTB யின் அவலநிலையே இது
இது குறித்து தொடர்ச்சியாக பலமுறை தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டபோதும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை பெரியமடு மக்கள் வேதனையுடன் தெரிவித்துக் கொள்கின்றனர்.
காலையில் ஆரம்பிக்கும் இச்சேவை சீரின்மையால் பாடசாலைமாணவர்கள், மற்றும் வேலைக்கு செல்பவர்கள், அன்றாட கடமையை நேரகாலத்துடன் முடிப்பவர்கள் என அனைவரும் பாதிக்கபடுகின்றனர்.
அடிப்படை வசதிகள் குறைவாக உள்ள பெரியமடு கிராம மக்களினால் நீண்ட நாட்களாக சுட்டிகாட்டப்படும் இந்த பிரச்சினையின் தீர்வாக
"தரமான புதிய பஸ் சேவையை"
வழங்குமாறு மீண்டும் தங்களிடம் பணிவான கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.
"பெரியமடு மண் வாசனையாளன்" A.C.M. Faisal (BA)
தகவல்
Ash sheikh Azhan Haneefa Madani




Post a Comment

0 Comments