பாறுக் ஷிஹான்
முஸ்லீம்களின் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சி தலைமைகள் ஏன் பேசுவதில்லை என ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ஜனுபர்.
வடக்கு மாகாண சபையின் 60 ஆவது அமர்வில் ஆளுங்கட்சி உறுப்பினர் சர்வேஸ்வரன் சமர்ப்பித்த பிரேரணையை ஆதரித்து மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
எங்களது (முஸ்லீம்கள்) கஸ்டங்களை மிகவும் வித்தியாசமானது.எமது மக்கள் தொடர்பாக கவலைகள் வட மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே இருக்கின்றது.ஆனால் பாராளுமன்றத்தில் உள்ள எதிர்கட்சி தலைமைகள் ஏதோ தெரியவில்லை எமது பிரச்சினை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதில்லை.இதனை உங்களிற்கு தெரிவிக்க கடமை பட்டுள்ளேன்.
எதிர்கட்சி என்ற உயரிய அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள தரப்பினர் இதனை தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும்.
எங்கள் மேய்ச்சல் தரைகள் பல இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளன.எனவே இது தொடர்பாக அக்கறை செலுத்த வேண்டும்.
முல்லைத்தீவு மாவட்டத்தை அபிவிருத்தி செய்ய பலரும் அக்கறை செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
0 Comments