அம்பாறை மாவட்டக்
கரும்பு உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அமைச்சர் றிசாத்
பதியுதீன் காட்டும் அக்கறைக்கும், ஆர்வத்துக்கும் தான் நன்றி கோருவதாக ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நேற்று மாலை (10/08/2016) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அளவீட்டு அலகுகள்
மற்றும் சேவைகள் திருத்தச்சட்ட ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும்
போது மேற்கண்டவாறு தெரிவித்த அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்டக் கரும்புத்
தொழிலாளர்கள் தமது தொழிலை மேற்கொள்வதற்கு
கல்லோயா பிளான்டேஷன் கம்பனியினர் இடைஞ்சலாக இருப்பதாகத் தெரிவித்தார்.


0 Comments