Subscribe Us

இந்த Olympic Season இல் உங்களுடன் பகிர்ந்துக்ககொள்ள.. குறுந்தூர ஓட்டமும் Reaction Time வும் ..


குறுந்தூர ஓட்டங்களில் False-Start (பிழையான ஆரம்பம் ) பற்றி அறிந்திருப்பீர்கள். 100m , 200m ஓட்டப்போட்டிகளுக்கு இது மிகவும் கவனமாக அவதானிக்கப்படும். தற்போது ரியோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் அதி தொழில்நுட்ப முறைகள் ஒவ்வொரு விளையாட்டிலும் அதன் தரத்தை பேண பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் குறுந்தூர ஓட்டப்போட்டிகள் Start பண்ணுவதற்காக சுடப்படும் Starting Gun உடன் இணைக்கப்பட்டுள்ள மைக்ரோ போன் ஒவ்வொரு ஓட்ட வீரர்களின் Starting Block உடன் இணைக்கப்பட்டு அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் ஒலியை கேட்கக்கூடிய வகையில் சிறு ஒலிபெருக்கிகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு வீரரின் மூளை ஒலியை உள்வாங்கி அதற்கு பின் கால்கள் ஓட ஆரம்பிக்க எடுக்கும் நேரம் (Reaction Time) 0.1s என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நேரமானது பல ஆய்வுகளின் பின் கணிக்கப்பட்ட ஒன்றாகும். இதில் பெண்களின் தசைகளில் சக்தி உருவாக்க வீதம் ஆணைவிட சற்று குறைவாக காணப்பட்டாலும் அதன் விலகல் (Deviation) குறித்த Reaction Time இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்த மாட்டாது என்பதனால் குறுந்தூர ஓட்டப்போட்டிகளில் கலந்துக்கொள்ளும் ஆண்கள், மற்றும் பெண்களின் Reaction Time 0.1s என The International Association of Athletics Federations (IAAF) இனால் நியமிக்கப்பட்டுள்ளது. 0.1s விட ஒருவர் குறைந்த நேரத்தில் தமது Strating ஐ செய்வார் எனின் அவர் False Start பண்ணியவராவார். இதனை அறிந்துக்கொள்ள, ஒவ்வொரு ஓட்ட வீரர்களின் Starting Block உடன் இணைக்கப்பட்டிருக்கும் Sensor அதனை குறித்த Track Official க்கு உடனே காட்டிவிடும். இந்த நவீன முயற்சிகள் 2002 முதல் IAAF இனால் அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

100m, 200m ஓட்ட வீரர்களின் முதலாம் இரண்டாம் இடங்களை வெறும் 0.08s வித்தியாசமே தீர்மானிப்பதால் இந்த Reaction Time அதி முக்கியத்துவம் வாய்ந்தது. 1996 இல் இடம்பெற்ற ஒலிம்பிக்கின் 100m போட்டியில் முதலாமிடத்த்தில் வருவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட பிரித்தானியாவை சேர்ந்த Linford Christie False-Start மூலம் இறுதி போட்டியில் இருந்து விளக்கப்பட்டதனால் தமது தங்க பதக்கத்தை இழக்க நேரிட்டது. அதே போல் உலகின் மிக வேகமானவர் என கூறப்படும் Usain Bolt 2011 இல் தென் கொரியாவில் இடம்பெற்ற World Championship இல் தமது தங்கப்பதக்கத்தை இழக்க வெறும் 0.014s அவசரப்பட்டதே காரணமாகும். அவர் 2008 க்குப்பின்னர் Title ஐ இழந்த முக்கியமான போட்டியாக இது கருதப்படுகிறது. நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒவ்வொரு மில்லி செக்கனும் எந்தளவு பெறுமதிவாய்ந்தது என்பதை இந்த ஓட்ட வீரர்களின் பாடங்கள் எமக்கு புகட்டி நிற்கின்றன.

09.08.2016
-Rinas Mohamed-

Post a Comment

0 Comments