Subscribe Us

இலஞ்சம் பெறுவோர் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைபாடுகள் குறைவடைந்துள்ளது


இலஞ்சம் பெறுவோர் தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைபாடுகள் குறைவடைந்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலஞ்சம் என்ற சொல்லை நாட்டிலிருந்தே அப்புறப்படுத்துவதற்கு பொதுமக்களின்ஒத்துழைப்பு அவசியம் என்பதோடு, இலஞ்சம் பெறுவது போன்றே இலஞ்சம் கொடுப்பதும் தண்டனைக்குரிய குற்றம் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
விசேடமாக அரச அதிகாரிகள் இலஞ்சம் பெறுவது தொடர்பான முறைபாடுகள் குறைவாககிடைப்பதற்கு காரணம் இலஞ்சம் பெறும் அரச அதிகாரிகள் தொடர்பில் முறையிடபொதுமக்கள் அக்கறை காட்டாமையே என்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுகுறிப்பிட்டுள்ளது.
மேலும், ஆணைக்குழுவிற்கு முறைபாடுகளை தெரிவிக்கும் நபர்கள் தொடர்பில் இரகசியங்கள் பாதுகாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ள ஆணைக்குழு, எவ்வித பயமும்இல்லாமல் ஆணைக்குழுவிற்கு இலஞ்சம் பெறுவோர் தொடர்பில் முறையிடுமாறு ஆணைக்குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments