நோன்புப் பெருநாளை முன்னிட்டு Gangstar கழகம் முதல் தடவையாக ஏற்பாடு செய்திருந்த மின்னொளி கடற்கரை கால்ப்பந்தாட்டப் போட்டி 2016:07:06 ம் திகதி கண்டல்குளி கடற்கரை மணல் திடலில் நடை பெற்றது.
இதில் கல்பிட்டிப் பகுதியின் தலை சிறந்த 10 அணிகள் பங்குபற்றியிருந்தன.
விலகல் முறையில் இடம்பெற்ற இச்சுற்றுப் போட்டியில் அனைத்துக் கழகங்களையும் வீழ்த்தி மாபெரும் இறுதிப் போட்டிக்கு அல்தாப் தலைமையிலான Wolveworiyans மற்றும் றிபாத் தலைமையிலான Roc KING guys ஆகியன தெரிவு செய்யப்பட்டு வெற்றி மகுடத்திற்கான பலப்பரீட்சை நடாத்தின.
மிகவும் விருவிருப்பாக நடந்த இவ்விறுதிப் போட்டி கோல் ஏதும் போடப்படாததால் தண்ட உதை (fenalty) மூலம் Roc KING Guys 1:0 என்ற அடிப்படையில் பலம் பொருந்திய Wolveworiyans அணியினை தோற்கடித்து 2016 இன் மின்னொளி கடற்கரை கால்பந்தாட்ட Champion மகுடத்தினை சூடிக் கொண்டது.
இத் தொடரின் சிறப்பாட்டக்காரராக Roc KING Guys இன் முன் கள வீரர் Shafni mohamed தெரிவானார்.
இவர் இச் சுற்றுப் போட்டியில் 03 கோல்களை போட்டிருந்தார்.











0 Comments