Subscribe Us

புத்தளம் மக்களின் பாரம்பரியத்தை பாதுகாத்த இன்றய விளையாட்டு நிகழ்வுகள்


புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு புத்தளம் சுப்பர் க்ரொஸ் கழகமும் புத்தளம் நகர சபையும் இணைந்து நடாத்திய விளையாட்டு போட்டிகள் இன்று(19.07.2016) மாலை 02:30 மணியலவில் புத்தளம் இஜ்திமா மைதானத்தில் நடைபெற்றது.

இன்றைய சிறப்புக்குரிய நிகழ்வில் அதிதிகளாக முன்னைய நாள் பாராளுமன்ற உறுப்பினரும்,கால் நடைவள பிரதியமைச்சரும்,முன்னால் நகர பிதாவுமான அல்ஹாஜ் கே.ஏ.பாயிஸ் அவர்களும், ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உயர்பீட உருப்பினரும்,மாகாண சபை உருப்பினருமான கெளரவ எஸ்.எச். நியாஸ் அவர்களும், மாகாண சபை உறுப்பினர்களான கெளரவ என்.டீ.எம்.தாஹிர் மற்றும் சிந்தக்க மாயாதுன்ன முன்னால் நகரபிதா என்.எம். நஸ்மி அவர்களும்,சட்டத்தரணி இஸ்னி அஸீப் அவர்களும்,ஆசிரியர் ஆசாத் அவர்களும்.மற்றும் முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் அஸ்கீன் அவர்களும் கலந்து சிறப்பித்து வெற்றிப்பெற்ற வீரர்களுக்கு பரிசீல்களை வழங்கி வைத்தார்கள்.

பலதரப்பட்ட வகையில் அரசியல் ரீதியாக தடங்களை சந்தித்த இந்நிகழ்வு ஏற்பட்டாளர்களின் விடா முயற்ச்சியினாலும், மக்களின் ஒத்துளைப்பாலும் இறுதிவரை சிறப்பாக நடைப்பெற்றதை அங்கு வருகை தந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் சான்று பகிர்வார்கள்.

இதில் அதிதியாக கலந்து சிறப்பித்த முன்னால் நகரபிதா கெளரவ கே.ஏ.பாயிஸ் அவர்கள் மக்கள் முன்னிலையில் உரையாற்றுகையில்



''பல வருட காலமாக புத்தளத்தின் பாராம்பரியமாக நடந்த வந்த இந்த ரேஸ் நிகழ்ச்சி மக்களால் மக்களுக்காக நடாத்தப்பட்ட நிகழ்வாகும். ஆனால் சிலர் தனது அரசியல் இலாபங்களுக்காக நமது ஊரின் பாரபரியத்துக்கு குந்தகம் விளைவிக்கும் வண்னம் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தடை செய்ய முற்படுகின்றனர். இன்று இந்நிகழ்வை நடாத்தும் ஏற்பாடுகளில் நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அதனை தடுப்பதற்காக தங்களது முழு அரசிய அதிகாரங்களையும், சண்டித்தனங்களையும் பாவித்தும் அல்லாஹ்வின் உதவியோடு அவற்றை நாம் ஒன்றினைந்து முறியடித்துள்ளோம் இது புத்தளம் மக்களின் பாரிய வெற்றியாகும்.இப்படிப்பட்ட புத்தளம் மக்களின் உரிமைகளுக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை கண்டிப்பதோடு இன்றிலிருந்து நமது மக்களின் உரிமை போரட்டத்தை ஆரம்பித்துள்ளோம் என்று ஆக்ரோஷமான முறையில் உரையாற்றினார்''

''மேலும் நகரபிதா தொடர்ந்து உரையாற்றுகையில் இந்நிகழ்வை நடத்துவதற்கு அதிகார ரீதியாக உதவிகளை வழங்கிய மாகாண சபை உறுப்பினர்களான எஸ்.எச். நியாஸ் மற்றும் என்.டீ.எம்.தாஹிர் அவர்களுக்கும், இதற்கு பண உதவி வழங்கிய வியாபரிகள் தொழிலதிபர்கள் மற்றும் அனைத்து உள்ளங்களுக்கும் மேலும் நிகழ்ச்சியை பலதரப்பட்ட சிரமங்களுக்கு மத்தியில் நடாத்திய ஏற்பாட்டாளர்களுக்கும் மற்றும் நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய பார்வையாளர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்''

இன் நிகழ்வில் பால்லயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்து தங்களது ஒத்துழைப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

-ஹமீத் உஸாமா(பர்ஜீஸ்)-












Post a Comment

0 Comments