தனதும், தனது சகோதரர்களுக்கும் சொந்தமான ஹெலிகொப்டர், லம்போகினி, தங்கக் குதிரை என்பவற்றை கூடிய சீக்கிரம் அரசாங்கம் கண்டுபிடிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் ஒன்று கூடல் நிகழ்வின் போதே அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்று வரை தனது தாய் மீது கூட முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனது இளைய சகோதரர் மீது மட்டுமே இதுவரை வழக்கு தொடரப்படவில்லை என்றும்தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இளைய சகோதரர் போன்ற இளையவர்கள் மீது இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலோ, உயர்நீதி மன்றிலோ வழக்கு தொடர்வது அவர்களுக்கு அகௌரவமான விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த அரசாங்கம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவை சிறிகொத்தாவின் கிளையாக்கியுள்ளதாகவும், அது கூட்டு எதிர்கட்சியினரின் மரண தண்டனை மத்திய நிலையமாக மாறியுள்ளதாகவும், குறித்த ஆணைக்குழு மூலம் கூட்டு எதிர்கட்சியினர் மாத்திரமே தண்டிக்கப்படுவதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.
மேலும் முன்பெல்லாம் நாமலுடைய ஹோட்டல் என்று குறிப்பிட்டவைக்கு இன்று தான்சென்று உணவருந்திவிட்டு பணம் செலுத்துவதாகவும், தான் கட்டியதாகக் கூறப்பட்ட ஹம்பாந்தோட்டை ஹோட்டலை இன்று இவர்கள் வெட்கமின்றி போய் திறந்து வைப்பதாகவும் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 Comments