தனியார் பஸ் கட்டணங்கள் 6 முதல் 7 வீதமாக அதிகரிக்கும் என தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அடுத்த வாரம் அறிவிக்கும் எனவும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி இது நடைமுறைக்கு வரும் எனவும் அந்த பேச்சாளர் கூறியுள்ளார்.
தனியார் பஸ் கட்டணங்கள் இறுதியாக 2013 ஆம் ஆண்டு 20 வீதமாக அதிகரிக்கப்பட்டது.
தற்போது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 2015 ஆம் ஆண்டு பஸ் கட்டணங்கள் 8 வீதமாக குறைக்கப்பட்டது.
இம்முறை பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக நாளை மறுதினம் போக்குவரத்து அமைச்சருடன் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.


0 Comments