Subscribe Us

சமூக வலைத்தளம் மூலம் சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நபருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை - காணொளி


சமூக வலைத்தளம் ஊடாக சிறுமிகளை ஏமாற்றி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நபரொருவரை இளைஞர்கள் குழுவொன்று அடித்து கொலை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் ரஷ்யாவில் பதிவாகியுள்ளது.

குறித்த 47 வயதுடைய நபர் நீண்ட காலமாக இவ்வாறு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்ததாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் , இளைஞர்கள் குழுவொன்றால் சிறுமியொருவரை போல் சமூக வலைத்தளத்தில் தகவல்களை பரிமாறி குறித்த நபரை ஒரு இடத்திற்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.

பின்னர் அவ்விடத்திற்கு வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சமூக வலைத்தளத்தில் பல சிறுமிகள் நண்பிகளாக உள்ள நிலையில் , அவர் சிறுமிகளுடன் இருக்கும் வீடியோக்களும் அதில் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தாக்கி கொலை செய்யப்படும் போது பதிவு செய்யப்பட்ட காணொளி கீழே...

Post a Comment

0 Comments