நாட்டில் மீண்டும் தலைதூக்கி வரும் இனவாதிகளின் அடாவடித்தனங்களை அடக்க உதவி புரியுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும் என, தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான அசாத் சாலி விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புனித ரமழான் மாதம் பல மகத்துவங்கள் பொருந்திய மாதம் என்பதாலும் பொறுமையைக் கடைப்பிடிக்க பயிற்சியளிக்கும் மாதம் என்பதாலும் ரமழானில் நோன்பு நோற்ற நிலையில் யாரேனும் சண்டை சச்சரவுகளுக்கு வந்தால், நான் நோன்பாளி என கூறி ஒதுங்குமாறு நபிகள் நாயகம் கூறியுள்ளதாக அசாத் சாலி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது
0 Comments