Subscribe Us

அடுத்து யாரை கைது செய்வது என்று கூட்டு எதிர்கட்சியினர் நன்கு அறிவார்கள் - ஹர்சன ராஜகருணா


அடுத்து யாரை கைது செய்வது என்று கூட்டு எதிர்கட்சியினர் நன்கு அறிவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நீதி,சட்டம் சாதாரணமாக செயற்படுவதை எண்ணி தான் சந்தோசப்படுவதாகவும், வட் வரி தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று ஸ்ரீ கொத்தா தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாமல் ராஜபக்ஸவின் கைது தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் சந்தோசமடையவில்லை என்றும், எனினும் சட்டமானது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவது தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ள அவர் இன்று தன்னை கைதுசெய்யப் போவதாக கூட்டமைப்பினரே ஊடகங்களிடம் முன்வந்து கூறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அவர்களுக்கே தெரிந்திருக்கிறது யார்யாரெல்லாம், எதற்காக கைது செய்யப்படுகின்றார்கள் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்சன ராஜகருணா சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments