யாழ்ப்பாணம் மற்றும் வெள்ளவத்தைக்கு இடையிலான பஸ் சேவைகளை நேற்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதற்காக இரண்டு பஸ்களை சேவையில் ஈடுப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் வெள்ளவத்தையில் இருந்து மாலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி புறப்படும் எனவும், மற்றைய பஸ் யாழ்பாணத்தில் இருந்து கொழும்புக்கு 10 மணியளவில் புறப்படும் எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், வெள்ளவத்தை புகையிரத நிலையம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் நிலையத்தில் இருக்கைகளுக்கான முன்பதிவுகளை பதிவு செய்துக் கொள்ளலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments