Subscribe Us

துட்டகெமுனு மன்னன் இருந்திருந்தால் அவருக்கு மின்சார நாற்காலி தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் - ராஜகீய பண்டித


துட்டகெமுனு மன்னன் இன்று உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு மின்சார நாற்காலி தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் ராஜகீய பண்டித மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவிற்கு ஆசி வேண்டி பிங்கிரிய கடிகமுவ பகுதியில் அண்மையில் நடத்தப்பட்ட மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
சிங்கள இனம் என்பது அன்று வண்டியில் கட்டியிருந்த மாட்டுக்கு, பால் வழங்கும் பசுவிற்கு, ஏனைய மிருகங்களுக்கு நன்றி பாராட்டிய இனமாகும்.
துட்டகெமுனு, பரக்கிரமபாகு போன்ற மன்னர்களின் சேவை இன்னும் நூறு ஆண்டுகள் சென்றாலும் எமது நெஞ்சங்களை விட்டு நீங்காது.நன்றி பாராட்டுதலுக்கு கால நேரம் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
எனினும், இன்ற துட்டகெமுனு மன்னன் இருந்திருந்தால் எல்லாளனுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகவும் கூறி போர்க்குற்ற நீதிமன்றில் மின்சார நாற்காலி தண்டனை அனுபவித்திருக்க நேரிட்டிருக்கும்.அந்த அளவிற்கு நாட்டில் நன்றி பாராட்டுதல் வளர்ச்சியடைந்துள்ளது.
எமக்கு பீதி மிகுந்த ஓர் காலம் இருந்தது.வீட்டை விட்டு வெளியே செல்லும் உறவினர்கள் மீளவும் வீடு திரும்புவார்களா எனத் தெரியாத நிலைமை காணப்பட்டது.
இந்த வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க 27000 படைவீரர்கள் உயிரைத் தியாகம் செய்ததுடன், 40000 முதல் 50000 வரையிலான படையினர் ஊனமுற்றனர்.
அவ்வாறான படைவீரர்கள் இன்று போர்க் குற்றவாளிகளாக மாறியுள்ளனர்.படைவீரர்களை போருக்கு தூண்டிய அவர்களுக்காக பூஜை வழிபாடுகள் செய்த எமக்கு இடி விழ வேண்டும்.
நாட்டை ஐக்கியப்படுத்திய படைவீரர்களை போர்க் குற்றவாளிகளாக தண்டிக்க முயற்சிக்கப்படுகின்றது.
புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக பௌத்த மதத்திற்கான முக்கியத்துவம் இல்லாதொழிக்கப்பட உள்ளது, சிங்கள பௌத்த நாடான இலங்கை மதங்களற்ற இராச்சியமாக பிரகடனம் செய்யப்பட உள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்ய முயற்சிக்கின்றார்கள்.
மாகாணசபை என்ற புலியை கட்டியிருக்கும் சங்கிலியே நிறைவேற்ற அதிகார ஜனாதிபதி முறைமை, அதனை அவிழ்க்க சிலர் முயற்சிக்கின்றனர் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments