கடன்களை திருப்பி செலுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக அரசாங்கத்துக்கு வரியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மருதானை – சுதுவெல்ல பகுதியில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
இளைஞர்களுக்கு எதிர்காலம் இருக்கிறது.
அவர்களை கடனாளிகளாக முன்கொண்டு செல்ல முடியாது.
இதன் காரணமாகவே வரியை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆனால் வரி அதிகரிப்பின் ஊடாக சாதாரண மக்களை பாதிப்படைய செய்ய முடியாது.
இந்த நிலையில் எதிர்வரும் தினங்களில் 15 அத்தியாவசியப் பொருட்களை நிவாரண விலையில் வழங்குவதற்கு எதிர்பாத்துள்ளோம்.
இதன்படி சீனி, மைசூர் பருப்பு, கிழங்கு, வெங்காயம், மிளகாய், டின் மீன், பயறு,
வெள்ளைப்பூடு, கடலை, நெத்தலி இவை அனைத்தும் குறித்த 15 அத்தியாவசியப் பொருட்களுக்குள் உள்ளடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments