Subscribe Us

காலம் தந்த மிகப் பெரிய பரிசு ; கண் காணத காதல் பற்றி நாம் ஏன் சிந்திக்க மறுக்கிறோம்



காலம் தந்த மிகப் பெரிய பரிசு உண்மையாய் நேசிக்கும் இதயங்கள்.காதல் பொழுவான ஓர் நிகழ்வென்றாலும் அது நிஜமாகி நிகழ்வாய் திருமணம் முடிவது ஏனோ சிலருக்கு மாத்திரமே! அதற்காய் காதல் தோல்வி ஏற்பட்டவர்கள் எல்லாம் நிஜத்தில் தோல்வி அடைந்தவர்கள் என்றில்லை.

இன்றைய சூழலில் முகம் அறியாமல் கனவில் காதலிக்கும் பலர் எம்மில் எத்தனையோ பேர்.முகநூல் காதல் என்பது பிரமச்சாரியம் தாண்டி,திருமணம் முடித்த பலரையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது என்றால் உண்மையில்லாமல் இல்லை.

ஆனாலும் இந்த கண் காணத காதல் பற்றி நாம் நிறைய சிந்திக்க மறுக்கிறோம்.தொழாதவனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்க தடை செய்த இஸ்லாம் எப்படி என்றே தெரியாதவனுக்கு எப்படி அனுமதிக்கும்?

தேவை என்ற நிமித்தம் இஸ்லாமிய நோக்கம் ஒன்றை இலக்காக கொண்டு நாங்கள் ஆண்களுடன் கதைத்தாலும் அது கூட இஸ்லாத்தில் எவ்வளவு தூரம் அனுமதிக்கப் பட்டது என்பதை சரியாக வரையருக்க முடியாத நிலையில் எப்படி இந்த முகநூல் காதலையும் சீண்டலையும் ஏற்கும்?

இங்கே யாரும் 100% தூய்மையான மனதுடயைவரும் இல்லை,பிழை செய்யாதவரும் இல்லை.ஆனாலும் காதல் என்பது கடைசியாய் எதிர்பார்ப்பது திருமணம் ஒன்றையே.எனவே அந்தக் காதலில் ஒழுக்கம் தவறிப் போவதும்,பெற்ற தாய் தந்தையரின் மானத்தைக் கப்பலேற்றி அன்னியவன் போல் வாழும் ஓர் ஆணை "நான் அன்பினால் திருத்திக் கொள்வேன்" என்று சொல்லிக் கொண்டு திருமணம் செய்து பாதி நாட்கள் வரை வாழ்ந்து பின்னர் "நான் தேடிக் கொண்ட விதி" என்று நோந்து கொள்வது அர்த்தமற்றது.

இவ்வாறான முயற்சிகளுக்கு இன்னும் சிலர் உதவி செய்தல் என்று சொல்லிக் கொண்டு ஆலோசனை வழங்குவது கூட மிகப் பெரிய பிழை.தற்செயலாக செய்யும் விபரீதமான காரியங்கள் அவர்களை தூண்டியவர்களுக்கே எதிரானவையாக முடியும்.எங்களை அறியாமல் நாங்கள் விபச்சாரத்துக்கு துணை போதல் என்பது இது தான்

எந்தத் தந்தையும் தன் மகள் தன்னை மீறி முடிவு செய்வதை விரும்புவதில்லை.தவிர இஸ்லாம் ஒரு பெண்ணுக்கு அவள் தந்தையின் அனுமதியின்றி இன்னோர் ஆண்மகனை திருமணம் செய்ய முடியாது.அப்படியிருக்க dating கலாச்சாரம் என்பது தனமையில் ஆடவண் ஒருவனை சந்தித்தல் என்பது பாரிய குற்றமே.இந்த கலாச்சாரத்தின் பாரிய அறுவடைகள் இன்று கண்டு கொண்டிருக்கும் தந்தை பெயரில்லாத குழந்தைகளும்,கருக் கலைப்புகளும்.

அல்லாஹ் தீயவற்றை விட்டும் எங்களைப் பாதுகாப்பானாக

-Binth Fathima-

Post a Comment

0 Comments