பெசில் ராஜபக்ஷ பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த காலத்தில் அவரது பெறுமதி வாய்ந்த இரண்டு நாய்களை கவனிக்கவென கடற்படையின் ஆறு சிப்பாய்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார்கள் என அறிக்கை கிடைத்துள்ளது.
'' நாய் பூல்" என குறிப்பிடப்பட்ட இந்த கடற்படை சிப்பய்கள் பிரிவினர்களது பணி நாய்களை கவனித்துக் கொள்ளுதல், குளிப்பாட்டுதல், உடம்பை நீவி விடுதல், மருந்து கொடுத்தல், உணவு வழங்குதல், கட்டளைகளுக்கு கீழ்ப்படிய பயிற்றுவித்தல் ஆகியனவாம்.அமெரிக்காவிலிருந ்து வரவழைக்கப்பட்ட நாயின் விலை 7 லட்சங்கள்.இந்தியாவிலிருந்த ும் ஒரு நாய் வரவழைக்கப்பட்டிருந்ததாம். அதன் விலை 2 லட்சம். இந்த இரண்டு நாய்களும் குளிர் பிரதேசத்தில் தான் வாழுமென்பதால். நாய்களின் அறை குளிரூட்டப்பட்டிருந்ததாம்.
கெபினட் அமைச்சர் ப்ருவருக்கான பாதுகாப்பு பிரிவில் 7 பேர் மட்டுமே என்றாலும் பெசிலின் பாதுகாப்புக்காக (2015.01.01 ஆகும் வரை) கடற்படையினர் 64 பேரும், இராணுவ படையினர் 84 பேரும், பொலிசார் 7 பேரும், அமர்த்தப்பட்டிருந்தனராம்.
2010.01.10 ஆம் திகதியிலிருந்து 2015.01.10 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் பெசிலினதும், குடும்பத்தினரதும் தனிப்பட்ட பிரயாணங்களுக்காக உள்னாட்டு விமான சவாரி (ஹெலி)க்காக 1554 இலட்ச ரூபாய்கள் ''கம நெகும" நிதியிலிருந்து செலவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சருக்கான உத்தியோகபூர்வ வாகனங்கள் 3 க்கு மேலதிகமாக 14 புல்லட் ப்ரூப் வாகனங்கள்.(எல்லாவற்றினதும் இலங்களுடன் விவரம் தரப்பட்டுள்ளது)இவ்வாறான வகையில் பெசில் ராஜபக்ஷ செய்துள்ள நிதி துஷ்பிரயோகத்தின் மொத்த பெறுமதி 419,822,413 ரூபாய்களாகும் என அறிக்கை கூறுகிறது.
இது சம்பந்தமாக நிதியமைச்சின் முன்னால் செயலாளர் பீ பீ ஜயசுந்தரவும்புலனாய்வு பிரிவுக்கு அழைக்கப் படலாம் என செய்தி மேலும் கூறுகிறது.
(ராவய 12.06.2016 முன் பக்க பிரதான தலைப்பு செய்தி.. செய்தியாளர் அருண ஜயவர்தன)
-HAJA SAHABDEEN-


0 Comments