பாறுக் ஷிஹான்
மீள்குடியேறி வறுமை நிலையில் உள்ள குடும்பங்களிற்கு வீடுகளை அமைப்பதற்காக ஒரு தொகுதி கூரைத்தகடுகளை மக்கள் பணிமனை தலைவர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி வழங்கியுள்ளார்.
நேற்றைய தினம் (28) செவ்வாய்க்கிழமை மக்கள் பணிமனையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சுமார் 30க்கு மேற்பட்ட குடும்பங்களிற்கு தகரங்கள் வழங்கப்பட்டன.
நோன்பு காலத்தில் இந்த உதவிகளை பெற்ற பயனாளிகள் மௌலவி சுபியானுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
கடந்த சில தினங்களிற்கு முன்னர் மக்கள் பணிமனை யாழில் உள்ள பள்ளிவாசல் ஊடாக பொதுமக்களிற்கு என பேரிச்சம்பழங்களை வழங்கிமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் சமூக சேவகர் சுவைஸ், கலீல் சாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments