Subscribe Us

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்த மஹிந்த


நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷ கடந்த ஆழிப்பேரலை அனர்த்தத்தின் போது வழங்கப்பட்ட உதவித் திட்டத்தில் 82 மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதி அமைச்சர், ரஞ்சன் ராமநாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

மகிந்த, முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஷ், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோர், தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களை அருகில் வைத்துக் கொண்டு இந்த ஊழலை மேற்கொண்டனர். 

இதன் காரணமாகவே தங்களை கைது செய்யுமாறு அச்சமின்றி கூறி வருகின்றனர். 

தவறிழைத்திருப்பார்களாயின் கட்சி பேதமின்றி அவர்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிட தாம் ஒரு போதும் அச்சமடையப் போவதில்லை.

அமைச்சர் ஜோன் அமரதுங்க மற்றும் ஹிருனிகா ஆகியோரின் குற்றங்கள் தொடர்பிலும் தாம் அச்சமின்றி கருத்துக்களை வெளியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments