Subscribe Us

header ads

குரங்கால் 4 மணி நேரம் மின்சாரம் இன்றி தவித்த கென்யா மக்கள்


கென்யாவில் குரங்கு ஒன்று மின்சார நிலையத்தில் மின்மாற்றி மீது விழுந்ததால் கென்யா முழுவதும் 4 மணி நேரம் மின்சாரம் விநியோகம் தடைபட்டது.


கென்யாவில் உள்ள ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது  குரங்கு ஒன்று விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. இதனால் 180 மெகாவாட் அளவிலான மின்சாரம் விநியோகிப்பது தடைபட்டது. 

இது குறித்து ஜிடரு புனல் மின்சார நிறுவனத்தின் பொதுமேலாளர் கென்ஜென் கூறியதாவது:

வனவிலங்குகள் வரமால் பாதுகாப்புக்காக மின்நிலையங்களை சுற்றி மின்வேலிகள் அமைப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்களுடைய எல்லா மின் நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம். ஜிடரு புனல் மின்சார நிலையத்தில் இருக்கும் மின்மாற்றி மீது  குரங்கு விழுந்ததில் மின்மாற்றி செயலிழந்தது. 4 மணி நேரத்தில் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் செய்யப்பட்டது. நேற்று ஏற்பட்ட மின்சார துண்டிப்பின் காரணமாக கென்யாவில் தொழில் துறை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு காரணமாக குரங்கு அதிர்ஷ்டவசமாக பிழைத்துகொண்டது. வைல்ட் லைஃப் சேவை மையத்தில் அந்தக் குரங்கு ஒப்படைக்கப்பட்டது.

 ஜிடரு புனல் மின்சார நிலையம் கிழக்கு ஆப்ரிக்காவில் பெரிய நீர்மின்சார நிலையம் ஆகும். இது அந்நாட்டின் மிக முக்கிய ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments