Subscribe Us

header ads

117 கோடி ரூபாவில் புதிதாக வாகனங்கள் தேவைப்படும் 30 அமைச்சர்கள் யார்?...



அமைச்சர்கள், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களுக்குப் புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக 117 கோடி ரூபா நிதியை ஒதுக்குமாறு கோரி முழுமையான மதிப்பீடொன்று ஆளுங்கட்சியின் பிரதம கொரடா, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்கவினால் கடந்த (07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

22 அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உட்பட 30 பேருக்கு இதன் மூலம் வாகனங்கள் கொள்வனவு செய்யப்படுவதற்காக நிதி ஒதுக்கப்படவுள்ளது.

புதிய வாகனம் கொள்வனவு செய்ய 117 கோடி கேட்கும் அமைச்சர்களின் பெயர் விபரங்கள் ...

*.பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – ரூபா 7 கோடி

*பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சர் சந்திம வீரக்கொடி மற்றும் பிரதியமைச்சர் அனோமா கமகே – ரூபா 7 கோடி

*உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு இரண்டு வாகனங்களும், பிரதியமைச்சர் நிமல் லன்சாவுக்கு ஒரு வாகனம் – ரூபா 9 கோடி 90 இலட்சம்

*திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுக்கு இரண்டு வாகனங்கள் – ரூபா 5 கோடி

*தொலைதொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ மற்றும் பிரதியமைச்சர் தாரநாத் பஸ்நாயக – ரூபா 9 கோடி 10 இலட்சம்.

*மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன – ரூபா 5 கோடி 60 இலட்சம்.

*சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் அருந்திக பெர்ணாந்து – ரூபா 5 கோடி 60 இலட்சம்.

*அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும்

*பிரதியமைச்சர் துணேஷ் கங்கந்த – ரூபா 6 கோடி 30 இலட்சம்.

*வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் மனூஷ நானயக்கார – ரூபா 2 கோடி 80 இலட்சம்.

*அபிவிருத்தி மூலோபாயம் இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவுக்கு இரண்டு வாகனங்கள் – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

*நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

*வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை பிரதியமைச்சர் இந்திக பண்டாரநாயக – ரூபா 2 கோடி 80 இலட்சம்.

*கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

*விசேட செயற்திட்ட அமைச்சர் சரத் அமுனுகம – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
பொது நிர்வாக பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே – ரூபா 2 கோடி 75 இலட்சம்.

*காணி இராஜாங்க அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

*நிலையான அபிவிருத்திகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா மற்றும் பிரதியமைச்சர் சுமேதா ஜி ஜயசேன – ரூபா 7 கோடி

*மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய – ரூபா 3 கோடி 50 இலட்சம்.
உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி. திகாம்பரம் – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

*நீர்பாசன இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக – ரூபா 3 கோடி 50 இலட்சம்.

*நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் பிரதியமைச்சர் துஷ்மன் மித்ரபால – ரூபா 7 கோடி

*மீள்குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்

*மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ன – ரூபா 7 கோடி
நீர்பாசன விஜித் விஜயமுனி சொய்சா – ரூபா 3 கோடி 50 இலட்சம். 

Post a Comment

0 Comments