Subscribe Us

வரலாற்றல் இன்று... ஜுன் - 09

68 : ரோம மன்னன் நீரோ தற்­கொலை செய்து கொண்டான். இதன் மூலம் ஜூலியோ குளோ­டிய பரம்­பரை ஆட்சி முடி­வ­டைந்­தது.

1873 : 16 தினங்­க­ளுக்கு முன்னர் திறந்து வைக்­கப்­பட்ட லண்டன் அலெக்­சாந்­திரா அரண்­மனை தீயினால் அழிந்­தது.

1885 : சீனா, பிரான்ஸ் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வரும் வித­மாக தியன்ட்சின் உடன்­ப­டிக்கை கையெ­ழுத்­தி­டப்­பட்­டது. இதன்­மூலம் தற்­போ­தைய வியட்­நாமின் பெரும்­ப­கு­தியை பிரான்­ஸுக்கு வழங்க வேண்­டிய நிலைக்கு சீனா தள்­ளப்­பட்­டது.


1923 : பல்­கே­ரி­யாவில் புரட்சி மூலம் இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்­றி­யது.

1928 : அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் ஐக்­கிய அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான பசுபிக் சமுத்­தி­ரப் ­ப­கு­தியை சார்ல்ஸ் கிங்ஸ்போர்ட் ஸ்மித் முதற்­த­ட­வை­யாக  விமா­னத்தில் கடந்தார்.

1934 : வோல்ட் டிஸ்­னியின் டொனால்ட் டக் கார்ட்டூன் கதை வெளி­வந்­தது.

1944 : பிரான்ஸில் 99 பொது­மக்­களை ஜேர்­ம­னியப் படைகள் தூக்­கி­லிட்டுக் கொன்­றன.

1944 : இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்­றியம் கிழக்கு கரே­லி­யா­வினுள் ஊடு­ரு­வி­யது.

1946 : தாய்­லாந்தில் மன்னர் ஆனந்த மஹிதோல் தனது படுக்­கை­ய­றையில் மர்­ம­மான துப்­பாக்கிச் சூட்­டினால் இறந்தார். பின்னர் அதுல்­யாதே தாய்­லாந்தின் மன்­ன­ராக முடி சூடினார். இவரே தற்­போது உலகில் மிக நீண்­ட­கா­ல­மாக ஆட்­சி­யி­லுள்ள மன்னர் ஆவார்.

1948 : சர்­வ­தேச சுவ­டிகள் பேரவை யுனெஸ்கோ அமைப்பின் ஆத­ர­வுடன் ஸ்தாபிக்­கப்­பட்­டது.

1965 : தென் வியட்­நாமின் பிர­தமர் பான் ஹுய் குவாத் ராஜி­னாமா செய்தார்.

1967 : 6 நாள் யுத்­தத்­தின்­போது கோலான் குன்­று­களை சிரி­யா­வி­ட­மி­ருந்து இஸ்ரேல் கைப்­பற்­றி­யது.

1972 : அமெ­ரிக்­காவின் தென்டகோட்டா மாநி­லத்தில் கடும் மழை­யினால் அணைக்­கட்டு ஒன்று உடைந்­ததால் 238 பேர் உயி­ரி­ழந்­தனர். 

1974 : சோவியத் யூனியன், போர்த்­துக்கல் நாடு­க­ளுக்­கி­டையில் இராஜ­தந்­திர உற­வுகள் ஸ்தாபிக்­கப்­பட்­டன. 

2009 : பாகிஸ்­தானின் பெஷாவர் நகரில் இடம்­பெற்ற குண்­டு­வெ­டிப்­பினால் 17 பேர் உயிரிழந்ததுடன் 46 பேர் காயமடைந்தனர்.

2010 : ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் திருமண வீடொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 40 பேர் உயிரிழந்தனர்.

Post a Comment

0 Comments