Graphic Designer Training Program கற்கை நெறியின் ஒரு பகுதியாக Photography (ஒளிப்படப்பிடிப்பு) கற்பிக்கப்படுகின்றது. (07.05.2016) இப் பாடத்தை பயிலுனர்கள் கற்றனர்.
‘‘ஒரு கிராபிக்ஸ் டிசைனர் தனது வடிவமைப்புக்குத் தேவையான ஒளிப்படங்களை தாமாக பிடித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்க வேண்டும்’’ என இக் கற்கை நெறியை வடிவமைத்த சகோ. ஹிஷாம் ஹுஸைன் கூறினார்.
பாடத்தை ஆரம்பித்து வைத்து, ஒளிப்படம் தொடர்பான தத்துவங்களை (theory) முதலில் பயிலுனர்களுக்கு விளக்கினார். அதனைத் தொடர்ந்து, இக் கற்கை நெறியைப் பயிலும் சகோ. எம்.என்.எம். பர்ஹான் செயன்முறை விளக்கத்தை சகோதர பயிலுனர்களுக்கு செய்து காட்டினார். பயிலுனர்கள் வித்தியாசமான ஒளி அமைப்புக்களில் படங்களைப் பிடித்து பயிற்சி பெற்றனர்.
மிகுந்த ஆர்வத்துடன் ஒளிப்படங்களை பிடிப்பதில் ஈடுபட்ட பயிலுனர்கள், ஆரம்ப நிலையிலும் கூட பொருத்தமான படங்களைப் பிடித்திருந்தனர். தாம் பிடிக்கும் ஒவ்வொரு படத்தையும் சகோ. பர்ஹானிடம் காட்டி அதன் குறை நிறைகளை கேட்டு அறிந்துகொண்டனர்.
ஒரு கிராபிக்ஸ் வடிவமைப்பாளன் தொழில் ரீதியாக முழு நிறைவு பெறச் செய்யும் நோக்கில் இக் கற்கை நெறி வடிவமைக்கப்பட்டு கற்பிக்கப்படுகின்றது.
இக் கற்கை நெறியின் இரண்டாவது மாணவர் தொகுதி (Batch) ஆள் சேர்ப்பு தற்போது நடைபெறுகின்றது. கிராபிக்ஸ் வடிவமைப்புத் துறையில் தொழில் தகைமையைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் i Soft College இல் பெயர்களைப் பதிவுசெய்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு :(+94 77 355 5540)
ISOFT PUTTALAM
College of ICT Education, Puttalam, Sri Lanka.
NO: 42, Nedunkulam Road, Puttalam., Puttalam





0 Comments