Subscribe Us

header ads

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரன பொருட்கள் சரியாக கிடைக்கின்றதா... அவதானம் ☂☁


வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் எமது நண்பர்கள் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வசித்த அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் தமது  உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாக அறியமுடிகிறது.


வெள்ள நிவாரணப் பணிகளில் அதிகமான முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இருந்தாலும் அவற்றின் சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கின்றதா என்பதில் சந்தேகம் ஏற்படுகின்றது.


பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்குச் செல்லும் தொன்டு நிறுவனங்கள் கட்டாயம் குறித்த பிரதேங்களின் பள்ளிவாயில்கள்,சமூக அமைப்புகள் அல்லது  தனிமனிதர்களோடேனும் கலந்துரையாடி பிரதேசத்தின் தேவைகளைக் கேட்டறிந்து செல்வது நல்லது.


அதேபோல் உதவி செய்யும் அமைப்புகளும் தங்கள் அமைப்புகள் களப்பணியில் ஈடுபடும் பிரதேசம்,காலம், உதவியின் தன்மை,கொண்டு செல்லும் பொருட்கள்  போன்ற தகவல்களைப் பரிமாரிக்கொண்டால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த உதவிகள் முழுமையாகக் கிடைக்க அது ஏதுவாய் அமையும்.


சில நேரங்களில் எல்லோரும் ஒரே மாதிரியான பொருட்களை கொண்டு செல்லலாம் ஆனால்  பாதிக்கப்பட்டவர்களின் தேவைகள் வேறுவிதமாக இருக்கக்கூடும்.


அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சொந்தங்களின் வீடுகளில் தங்கியிருப்பவர்களின் தகவல்களைத் திரட்டி அவர்களையும் நிவாரணப் பொருட்கள் போய்ச் சேரும்படி செய்வதும் மிக முக்கியம்.


இந்த மாதிரியான திடீர் அனர்த்தங்களின்போது எதிர்பாராத வெளியில் சொல்ல முடியாத சங்கடங்களைப் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்நோக்கிக் கொண்டு இருக்கலாம்.


உடுத்த உடையோடு இரவோடு இரவாக ஒரு முகாமுக்கு வந்திருப்பார்கள்.அதிலும் குறிப்பாக பெண்கள் சொல்லமுடியாத சங்கடங்களை சந்தித்துக்  கொண்டு இருப்பார்கள்.


நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் தொன்டு நிறுவனங்கள் உடைகளைக் கொண்டு செல்லும்பொழுது உள்ளாடைகள்,மாதவிடாய் ஏற்படும்பொழுது பெண்கள் பயன்படுத்தும் பொருட்கள் போன்றவற்றை  எடுத்துச் சென்றால் மிகவும் பிரயோசனமாய் அமையக்கூடும்.


பொதுவாக யாரிடமும் எந்த உதவியும் பெறாமல், கைநீட்டி உதவிகள் பெற்றுப் பழக்கமில்லாதவர்கள்  பலத்த சங்கடங்களுடன் இந்த மாதிரி முகாம்களில்  இருப்பார்கள்.அப்படியானவர்களை இணங்கண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றிக் கொடுப்பதும் அனைவரதும் கடமை.


உதவிகள் செய்யும் அமைப்புகள்,பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் பள்ளிவாயில்கள் போன்றவற்றுக்கிடையில் ஒரு சரியான Coordination  உம் ஒரு Mutual Understanding உம் இருந்தால் இந்த களப்பணிகளின் உச்ச பயனை பாதிக்கப்பட்ட  மக்கள் பெற்றுக் கொள்வார்கள்.


நம் அனைவரதும் எண்ணங்களையும்,செயல்களையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக.

Post a Comment

0 Comments