Subscribe Us

மீண்டும் கற்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் ஆரம்ப பிரிவு - மக்கள் பெரும் மகிழ்ச்சி


எமது அல-அக்ஸா தேசிய பாடசாலையில் 2014 ஆம் ஆண்டில் இருந்து தரம் 1 மாணவர்களை உள்வாங்குவதற்கு  தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இதனால் தரம் 1 மாணவர்கள் பாடசாலையில் சேர்ப்பதற்காக கிட்டத்தட்ட 4 km வரை செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது இதனால் பெற்றோர்களும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

இப்பிரச்சினையை கருத்திற்கொண்டு கற்பிட்டி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளர் M.H.M HILMI மாகாண சபை உறுப்பினர் (முஸ்லிம் காங்கிரஸ் ) திரு நியாஸிடம் இது சம்பந்தமாக கலந்துரையாடி , நியாஸின் வேண்டுகோளுக்கினங்கி மகாண கல்வி அமைச்சர் திரு. சந்திமா ராஜபக்ஷ 060//2016 வெள்ளிக்கிழமை பி.ப 01.30 மணியளவில் அல்ஷஅக்ஸா தேசிய பாடசாலைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

பாடசாலைக்கு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் அல்-அக்ஸாவிக் ஆரம்ப பிரிவினை பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தார். இவ்வளவு வளமான ஆரம்ப பிரிவையும் கட்டிடங்களையும் , சுற்றாடலையும் கொண்டு இருக்கும் போது ஏன் ஆரம்ப பாடசாலையை இன்னமும் தொடங்கவில்லை என்ற கேள்வியையும் தொடுத்தார்.

உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் 2017ம் ஆண்டு தரம் 1க்கான மாணவர்களை உள்வாஙங்கும் படி சம்பவத்திரட்டு புத்தகத்தில் எழுதி அனுமதியையும் கொடுத்தார்.

இந்நிகழ்வானது கற்பிட்டி பிரதேச மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதற்காக மாகாண கல்வி அமைச்சரையும் , மகாண சபை உறுப்பினர். நியாஸ் மற்றும் ஹில்மி , அதிபர் , ஆசிரியர்கள் , பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களையும் பொதுமக்கள் வாழத்துகிறார்கள்.

Post a Comment

0 Comments