Subscribe Us

அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்லிம்­கள் நுழைய தடை; டொனால்ட் ட்ரம்ப்


அமெ­ரிக்­கா­வுக்குள்  முஸ்­லிம்கள் நுழைய தடை விதிப்­பது என்­பது வெறும் யோசனை மட்­டுமே என குடி­ய­ர­சுக்­கட்சி ஜனா­தி­பதி வேட்­பாளர் டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.
முன்­ன­தாக கடந்த டிசம்பர் மாதம் பிர­சாரம் மேற்­கொண்ட டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்­கா­வுக்குள் முஸ்­லிம்கள் நுழை­வ­தற்கு தடை விதிக்­கப்­படும் என கூறினார். இது சர்­வ­தேச அளவில் பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.
இந்­நி­லையில், பொக்ஸ் வானொ­லிக்கு ட்ரம்ப் அளித்த செவ்­வியில், “முஸ்­லிகள் அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வாதம் என்­பது அதி­முக்­கிய பிரச்­சினை. அதை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அமெ­ரிக்­கா­வுக்குள் நுழைய முஸ்­லிம்­க­ளுக்கு தடை விதிப்­பது என்­பது வெறும் யோசனை மட்­டுமே. அதுவும் தற்­கா­லி­க­மா­னதே. இந்த நட­வ­டிக்­கையை இது­வரை யாரும் செயற்­ப­டுத்­த­வில்லை.
முஸ்லிம் அடிப்­ப­டை­வாத பயங்­க­ர­வா­திகள் உலகம் முழு­வதும் பரவி இருக்­கின்­றனர். முஸ்­லிம்கள் பாரி­ஸுக்கு செல்ல முடி­கி­றது, சான் பெர்­னார்­டியோ செல்ல முடி­கி­றது. முஸ்லிம் அடிப்­டை­வாதம் பர­விக்­கி­டப்­பதை லண்டன் நகரின் புதிய மேயர் சாதிக் கான் போன்றோர் வேண்­டு­மானால் மறுக்­கலாம்.­ ஆனால், நான் அதை எப்­போ­துமே மறுக்­க ­மாட்டேன்.
சாதிக் கான் நமது ஜனா­தி­பதி ஒபாமா போல் முஸ்லிம் அடிப்படைவாத பயங்கரவாதத்தை மறுக்கிறார்” என தெரி­வித்­துள்­ளார்.

Post a Comment

0 Comments