2) தங்கள் இறைவனை வணங்க தாங்கள் வாழ்ந்த இடத்தில் எழுப்பிய முதல் இறையில்லம் கஃபா இருக்குமிடமாகும்...
3) அவர்கள் அந்த பூமியில் வெறும் 40 வருடமே வசித்ததாகவும் பின் அல்லாஹ்வின் அருளை தேடி வேறு இடம் சென்றதாக ஹதீஸ் உள்ளது...
4) அதற்க்கு பின் அவர்கள் மூலம் மக்கள் பெருகினர்.. உலகம் முழுவதும் பல திசைகளில் பரவினர்.. ஆனால் இந்த மக்கா மனிதர்கள் வசிக்க அடிபடை தேவையற்ற பாலைவனமாகவே ஆள் நடமாட்டம் இன்றி இருந்தது....
5) நூஹ் நபி காலத்தில் உலகம் முழுதும் ஏற்பட்ட வெள்ளத்தில் மண்ணுள் புதைந்தும் போனது...
6) ஆதம் அவர்களுக்கு பலாயிரம் ஆண்டுகளுக்கு பின் தோண்றிய இப்றாகிம் நபி மூலம் இறைவன் இந்த மக்காவை முஸ்லிம்களின் தலமையகமாக ஆக்க நாடுகிறான்...
7) இப்றாகிம் நபியுடைய மனைவி ஹாஜர் அவர்களையும் அவர்களது மகன் கைகுழந்தையாக இருந்த இஸ்மாயில் அவர்களையும் இறைவன் மக்காவில் விட்டுவிட்டு சென்றுவிடுமாறு கட்டளையிடுகிறான்..
8) ஆள் நடமாட்டம் இன்றி இருக்கும் மக்கா பாலைவனத்தில் இறைவனின் கட்டளைகினங்கி மனைவி, பிள்ளையை விட்டுவிட்டு செல்கிறார் மனைவியும் இறைவனின் கட்டளைக்கு அடிபணிந்து ஒத்துழைக்கிறார்....
9) இபுறாகிம் நபி கொடுத்து சென்ற உணவும் தீர்ந்து தொண்டை வரண்டு கைக்குழந்தை இஸ்மாயில் கதறி அழ தண்ணீர் தேடி அருகில் இருந்த இரு குன்றுகளுக்கிடையே மாறி மாறி ஓடுகிறார் அவரது தாய் ஹாஜர் அவர்கள்
10) உதவிகிட்ட வில்லை, குழந்தையின் அழுகுறளும் அடங்கியது பதறிய திரும்பிய தாய்க்கு அங்கு இறைவனின் அற்புத அதிசயம் காட்சி அளித்தது.. குழந்தைக்கு அருகில் நீரூற்று உருவாகி குழந்தையின் வாயை தொட்டுருந்தது...
11) தண்ணீரையும், அங்கு கிடைத்த பேரீச்சைகளையும் கொண்டு போதுமாக்கி கொண்டனர் அந்த தாயும், மகனும்...
12) அப்பொழுது அவ்வழியாக வந்த அரபி மொழி பேசும் நாடோடி கூட்டம் தண்ணீர் இருப்பதை அறிந்து அங்கயே இருப்பிடம் அமைக்க அந்த தாயிடம் அனுமதி கேட்கிறது.....
13) அண்ணை ஹாஜர் அவர்களும் சில நிபந்தனை அளிக்க அவர்கள் ஏற்று கட்டுபட்டு அங்கு இருப்பிடங்களை அமைத்து அது இறைவன் நாட்டபடி ஊராகிறது...
அல்லாஹ்_அக்பர்


0 Comments