திருமணம் முடித்தோரும்,முடிக்க இருப்போரும் அவசியம் வாசியுங்கள்.

"நான் கொடுக்கிறேன் சிலவேளை நிறையவே கொடுக்கிறேன்.ஆயினும் அடுத்த தரப்பிடம் எத்திருப்தியையும் நான் காண்பதில்லை"

இப்படி ஒரு ஆணும் பெண்ணும் நினைக்கலாம்.

உண்மையில் ஆண் கொடுக்கும் போது பெண் விரும்புவதை அல்லது அவளுக்குத் தேவையானதைக் கொடுக்க வேண்டும்;ஆண் விரும்புவதை அல்ல.அதே போல் தான் பெண்ணும் ஆணுக்கு விரும்புவதையே வழங்க வேண்டும்.

பெண் ஆண் விரும்புவதைக் கொடுக்க, ஆண் பெண் விரும்புவதைக் கொடுக்க ஒவ்வொருவரும் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிய வேண்டும்

உளவியலாளர்கள் இவ்வாறு கூறுவார்கள்

*ஆணின் முதன்மைத் தேவைகள்

1.நம்பிக்கை வைத்தல்
2.ஏற்றல்
3.மதிப்பளித்தல்
4.பாராட்டல்
5.அங்கீகரித்தல்
6.உற்சாகப்படுத்தல்

*பெண்ணின் முதன்மைத் தேவைகள்

1.அக்கறை செலுத்தல்
2.புரிதல்
3.மரியாதை கொடுத்தல்
4.முதன்மைப் படுத்தல்
5.உறுதி செய்தல்
6.மீண்டும் மீண்டும் உறுதி செய்தல்

இத் தேவைகள் இருபாலாருக்கும் முக்கியமாகையால் இவற்றை நாம் தேடி அறிய முயற்சிப்போம் இன்ஷா அல்லாஹ்.