Subscribe Us

நாமலுக்கு ஒரே நாளில் இரண்டு விசாரணைகளா? மஹிந்த ஆவேசம்


ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவும், நிதி மோசடி விசாரணை பிரிவினரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஆஜராகுமாறு அறிவித்துள்ளனர்.
எனது மகன் நாமலை எவ்வாறு ஒரே நேரத்தில் ஒரே நாளில் இரண்டு விசாரணைகளில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்க முடியும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தனது டுவீட்டர் கணக்கில் தகவல் ஒன்றை பதிவேற்றம் செய்துள்ளார்.
எவ்வாறு ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஆஜராக முடியும்? இரண்டு விசாரணைகளும் ஒரே நேரத்திலா? என்றும் அவர் அதில் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது தந்தை ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்துக்களை குவித்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments