Subscribe Us

பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற வாலிபருக்கு இளம்பெண் கொடுத்த மறக்கமுடியாத தண்டனை


தெற்கு பிரான்சில் உள்ள துலூஸ் நகரின் புர்பான் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை வெளியே சென்றிருந்த அந்த இளம்பெண் மாலை நேரம் தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது அவரை பின் தொடர்ந்த 24 வயது வாலிபர் ஒருவர் அந்த பெண், மின்தூக்கியில் பயணம் செய்யும் போது துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். அந்த பெண் தனது முழு பலத்தையும் திரட்டி வாலிபரின் பிடியில் இருந்து தப்ப முயன்றுள்ளார்.

ஆனால், வாலிபரின் பலத்தை எதிர்க்கொள்ள முடியாத பெண் 'இனி தனது பலத்தால் அவனிடமிருந்து தப்பிக்க முடியாது' என நினைத்து அவனது விருப்பத்திற்கு இணங்குவது போல் நாடகமாடியுள்ளார்.

உற்சாகமடைந்த வாலிபர் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதுடன், முத்தம் கொடுத்துள்ளார்.

இது தான் தப்பிக்க சரியான தருணம் என தீர்மானித்த பெண், தனது பலம் முழுவதையும் திரட்டி வாலிபரின் நாக்கை பற்களால் பலமாக கடித்து இரண்டாக துண்டாக்கியுள்ளார்.

வலியால் துடித்த வாலிபர், மின்தூக்கி நின்றதும் ரத்தம் சொட்ட சொட்ட அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முறைப்பாடு பெற்று பொலிஸார் மின்தூக்கியை சோதனை செய்தபோது, அங்கு வாலிபரின் துண்டிக்கப்பட்ட பாதி நாக்கு இருந்ததை கண்டு அதனை எடுத்து மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பாதி நாக்குடன் தப்பியுள்ள நபர் நிச்சயமாக அருகில் மருத்துவமனையில் சிகச்சை பெறுவார் என சோதனை நடத்திய போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது பொலிஸார் துஷ்பிரயோக முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Post a Comment

0 Comments