அக்கரைப்பற்று மாநகர சபையின் கீழ் உள்ள காதிரியா பிரதேசத்தில் அமைந்து இருக்கும் வீதிகள் ஆசிய அபிவிருத்தி வங்கியியின் மூலம் அக்கரைப்பற்றுக்கு கிடைத்து இருக்கும் 18 Km கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்கப்பாடமையால் காதிரிய மக்கள் மனவேதனை அடைந்துள்ளார்கள்.
கடந்த காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ஜெய்க்கா வீதிகளில் அக்கரைப்பற்று காதிரியா கடற்கரை பிரதான வீதி மற்றும் உள்வாங்கப்பட்டு மற்றைய வீதிகள் உள்வாங்கப்படமை புறக்கணிக்கப்பட்ட வரலாறும் இங்கு சுட்டி காட்ட வேண்டிய நிர்பந்தம் எமக்கு உள்ளது.
இப் பிரதேசத்தில் எந்த வீதிகளும் புனர்நிர்மாணம் செயப்படாமல் காணப்படுவதை நமது கண்களால் பார்வையிட கூடியதகவுள்ளது . மழை காலங்களில் பல வீதிகள் மற்றும் வீடுகளில் வெள்ளம் 5 அடி மற்றதில் வருவதும் மக்கள் வீடுகளை விட்டு உறவினர் வீடுகளுக்கு செல்லுவதும் பல வீதிகளில் வாகனங்கள் செல்ல முடியாமலும் காணப்படுவதை நாம் பல வருடங்கள் கண்டு கொண்டுதான் வருகிறோம் தவிர அதனை நிவர்த்தி செய்வதற்கு இன்னும் காலம் வராமல் தான் இருந்து கொண்டு இருப்பதை காண முடிகின்றது.
வாக்கு கேட்கும் நாட்களில் காதிரியா பிரதேசத்துக்கு நடையாய் நடந்து வருவார்கள் தவிர வேறு எந்த காரணத்துக்கும் எந்த அரசியல் வாதிகளும் காதிரிய பிரதேசம் பக்கம் வருவது என்பது கிடையாது.
காதிரியா பிரதேசத்தில் மாநகர சபை உறுப்பினர்கள் இருந்தும் இப் பிரதேசத்தில் அவர்களினால் செய்த சேவையை குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு அவர்களின் சேவை இங்கு காணப்படுகிறது.
மேலும் அமைச்சர்கள் , மாகாண சபை உறுப்பினர் மற்றும் மாநகர உறுப்பினர்கள் இருந்து அக்கரைப்பற்று பல அபிவிருத்திகளை கண்டாலும் அக்கரைப்பறின் மற்றைய பிரதேசங்களை விட காதிரியா பிரதேசம் 100 க்கு 5 வீதம் அடிப்படையில் தான் ஒரு சில அபிவிருத்திகள் நடைபெற்றுள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.
நாங்களும் அக்கரைப்பற்று மாநகர மக்கள்தான், நாங்களும் இம் மண்ணில் பிறந்தவர்கள் ஆகவே நீதியாகவும், நியாயமாகவும் சிந்தித்து பாகுபாடுகளை மறந்து வீதிகள் மற்றும் ஏனைய அபிவிருத்திகளை செய்யுமாறு கீழ் குறிப்பிடும் அரசியல் வாதிகள் மற்றும் அரச உயர் அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றோன்.
1.அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர்
2.அக்கரைபற்று சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்
3.முன்னால் காதிரியா பிரதேச மாநகர சபை உறுப்பினர்கள் 4.அக்கரைப்பற்று அரசியல் வாதிகள்
5.அக்கரைப்பற்று பிரதேச செயலாளர்.
இப்படிக்கு
காதிரியா பிரதேசத்தை நேசிக்கும் மகன்
ஜுனைதீன் முஹம்மட் சியான் .






0 Comments