காவற்துறையினருக்கு பயந்து இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சிலாபத்தில் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.
காவற்துறை குறித்த இளைஞனுக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பிற்கு பின்னர் இவ்வாறு அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 14 ஆம் திகதி மஹவல காவற்துறை அதிகாரி ஒருவரால் அவருக்கு தொலை பேசி அழைப்பு விடுத்து இன்று மாலை காவற்துறைக்கு முன்னிலையாகுமாறு தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இளைஞரின் நண்பர் ஒருவர் எமது செய்தி சேவைக்கு தெரிவிக்கையில், 'தனது நண்பனுக்கு எதிராக அவரது காதலியின் பெற்றோர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்' என்றார்.


0 Comments