கொழும்பில் இருக்கும் முன்னணி இஸ்லாமிய முஸ்லிம்(?) மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதமர் ரணில், கல்வி அமைச்சர் அகில, அமைச்சர் பௌசி, நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது கல்வி அமைச்சரின் பிறந்த தினத்தை முன்னிட்டு அந்தப் பாடசாலையில் பிறந்த நாள் கேக் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், அந்நிய ஆண்கள் மத்தியில் நெருக்கியடித்து நின்று கொண்டு மாணவிகள் கல்வி அமைச்சருக்கு ஹெப்பி பேர்த் டே டூ யூ பாட வைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இஸ்லாமிய கலாசாரங்களை எட்டி உதைக்கும் வகையில் ஒரு மாணவியை வைத்து கல்வியமைச்சருக்கு பிறந்த நாள் கேக் ஊட்டியும் விடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் குறித்த பாடசாலையில் மாணவிகள் உள்ளே நுழைந்தவுடன் தலையில் இருக்கும் ஹிஜாபை கழற்றி விட வேண்டும் என்ற நிபந்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றத ு.
இதன் மூலம் அலுவலகத்துக்கு வரும் அந்நிய ஆண்கள் முன்னிலையில் மாணவிகள் ஹிஜாப் மற்றும் முந்தானை இன்றி காட்சியளிக்க நேர்கின்றது.
இஸ்லாமிய விழுமியங்களுடன் கல்வியை போதிக்க உருவாக்கப்பட்ட குறித்த பாடசாலை ததற்போது வழிதவறிப் போய்க் கொண்டிருப்பதாகவே சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-Fahad Junaid-


0 Comments