ஒரு அனர்த்தம் வரும்பொழுது நாம் அனைவரும் ஒன்றுபட்டுவிடுகின்றோம்.
இயக்க,பிரதேச வேறுபாடுகளின்றி பணத்தால்,பொருளால் உடலால் உதவி செய்கின்றோம்.
ஆனால் இந்த உதவி,ஒத்துழைப்பு,தியாகம் எல்லாம் செய்வதற்கு ஒரு அனர்த்தமே வரவேண்டுமா ?
யாருடைய பொருளாதாரத்துக்கும் எந்தவிதப் பாதிப்புமில்லாமல் இரண்டு மூன்று நாட்களில் கோடிக் கணக்கிள் புரட்ட முடிந்த சமூகத்துக்கு........
ஒழுங்கான பாடசாலைகள் இல்லை, இருக்கும் பாடசாலைகளில் ஆயிரம் குறைபாடுகள் எமது ஊர்களின் வைத்தியசாலைகள் வசதிகளின்றி காய்ந்து கிடக்கிறது.
சீதனம்,விவாகரத்து,வழக்கு,காதி நீதிமன்றம் என்று ஒரு கூட்டம் ஆயுளின் பாதியை வழக்குப் பேசுவதில் கழித்துக் கொண்டு இருக்கின்றது.
மத்திய கிழக்கு பணிப்பெண்கள் என்ற பெயரில் தொழிலுக்கு செல்பவர்கள் அங்கே படும் அவளங்கள்.
பாதியோடு படிப்பை நிறுத்திவிட்டு செய்வதரியாது இருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்.
படித்துவிட்டு தொழில் தேடி அலையும் இளைஞர், யுவதிகள்.
ஒரு புதிய கல்வியாண்டுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வாங்கக்கூட வசதியில்லாத மாணவர்கள்.
பள்ளிகளுக்கு முன்னால் கை நீட்டிக்கொண்டிருக்கும் பெண்கள்.
நீர்,சுகாதாரம் போன்ற அடிப்படை வசதி இல்லாத கிராமங்கள் ஒரு வகையில் மிக நீண்டகாலமாக எமது சமூகமும் அனர்தத்தில் பாதிகப்பட்டுதான் இருக்கின்றது.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் படும் அதே கஷ்டங்களை எமது சமூகத்தில் பாதிக்கும் அதிகமானவர்கள் வாழ்நாள் முழுவதும் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
எமது சமூகத்தில் ஒரு சரியான வழிகாட்டலும், ஒருங்கினைப்பும் இருந்தால் எந்த அரசாங்கத்தையோ,அரசியல்வாதிகளையோ நம்பாமல் எமது பிரச்சினைகளை எமக்குள்ளாலேயே தீர்த்துக் கொள்ள முடியும் என்பதை இந்த வெள்ள நிவாரணப்பணிகள் எமக்கு உணர்த்தியிருக்கிறது.
ஒரு அனர்த்தத்தின் போது இயக்கம் பிரதேசம் எல்லாவற்றையும் மறந்து நாம் ஒன்றுபட்டதுபோல் நாம் எப்போதும் ஒன்றினைந்தால் இன்னுமொரு ஐந்து அல்லது பத்துவருடத்தில் ஒரு தன்னிறைவான சமுதாயத்தை உருவாக்க முடியும் இன்ஷா அல்லாஹ்.
-Safwan Basheer-


0 Comments