கடலை மாவு - 2௦௦ கிராம்
வெங்காயம் - 25௦ கிராம்
கறிவேப்பிலை - சிறிதளவு
பச்சை மிளகாய் - 5
நெய் - 5௦ கிராம்
சோம்பு - 1௦ கிராம்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* வெங்காயத்தை மெல்லிய அகன்ற துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
* பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* நெய்யை உருக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சோம்பு, உருக்கிய நெய், உப்பு ஆகியவற்றை கடலை மாவுடன் நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது.
* ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காய கலவையை உதிரி உதிரியாக போடவும்.
* பொன்நிறமாக சிவந்து வரும் வரை வறுக்கவும். சூடாக பரிமாறவும்.
* சுவையான வெங்காய பக்கோடா ரெடி.


0 Comments