இன்று உங்கள் முன் ஆச்சரியமான ஒரு வியாபாரியை அறிமுகம்செய்கின்றேன் .
ஹாஜியானி முகைதீன்பாவா றகுமத்தும்மா
வயது - 77
அக்பர்பள்ளி வீதி
ஐயங்கேணி
ஏறாவூர்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு
இவருக்கு நான்கு பிள்ளைகள் உண்டு . ஒரு பெண் மூன்று ஆண்கள் . அனைவரும் திருமணம் முடித்தவர்கள் .
ஏழ்மை நிறைந்த வாழ்க்கை .கணவர் 35 வருடங்கள் இவரோடு வாழ்ந்து பிரிந்த நிலையில் வாழ்வாதார பிரச்சினையில் மிகவும் துன்பப்பட்டார் இந்த தாய் . ஆச்சரியம் என்னவெனில் வாழ்க்கையின் ஆறம்பமுதலே கைத்தொழிலை கற்றுக்கொண்டார் . மிகவும் சுருசுருப்பானவர் .
பொதுச்சந்தையில் ஆறம்பித்த தொழில் ! கீரைவகைகளை செங்கலடிக்குச் சென்று அந்த கீறைவகைகளை வாங்கி வந்து ஏறாவூர் பழைய சந்தையில் தினமும் விற்றுவருகிறார் தற்போதும் இதனை நிறந்தரமாக செய்து வருகிறார் மாஷா அல்லாஹ் .
ஒரு முறை ஹஜ்ஜும் மறுமுறை
உம்றாவும் செய்துள்ளார் இந்த தாய் ! இவர் கீறைவகைகளை விற்றுதான் இக்கடமையை செய்துள்ளார் என்பது மெய்சிலிர்க்க வைக்கின்றது.
பணம் இருந்தும் ஹஜ் செய்யும் பாக்கியம் நிறைய பேருக்கு கிடைப்பது இல்லை . இந்த ஏழை பெண்மணிக்கு இறைவன் கொடுத்த அருட்கொடையாகவே என்னுகின்றேன். ஐவேளையும் நேரம்தவராத தொழுகையாளி . எல்லோரிடமும் அன்பாக வாமன போமன என்ற வார்த்தையே அவரிடம் நிறைந்து உள்ளது.
மென்மையான குரல்வலமிக்க இவருக்கு எல்லாம் வள்ள இறைவன் மென்மேலும் பறக்கத் செய்வானாக இன்னும் நீண்ட நாட்கள் வாழ வள்ள நாயகன் துனைபுரிவானாக ஆமீன்.
இச்செய்தியின் நோக்கம் சிறு தொழிலேனும் செய்து இஸ்லாத்தின் கடமையின் ஒன்றான ஹஜ்ஜை எல்லோரும் நிறைவேற்றனும் என்பதே.







0 Comments