நீரிழிவு நோயாளர்களுக்காக பெற்று கொடுக்கப்படும் "மெட்போமின்" என்ற மருந்தின் ஒரு தொகை தரமற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த மருந்து தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது இந்த நாட்டு நிறுவனத்தினூடாக மருந்தகங்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
தற்போது மேல் மாகாணத்தில் உள்ள பல மருந்தகங்களில் நோயாளர்களுக்காக விற்பனை செய்யப்படும் இந்த மருந்துகளில் கறுப்பு புள்ளிகள் வெளியே தோன்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பூஞ்சை போல காட்சியளிக்கின்றது.
மருத்துவர்கள் குறித்த மருந்தின் மாதிரியை, தேசிய தர பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர்.
இது தொடர்பான பரிசோதனை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீரிழிவு கட்டுப்படுத்தக்கூடிய நோயாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நோயிக்காக பெற்று கொடுக்கப்படும் மருந்துகளின் தரம் தொடர்பாக மருத்துவர்கள் கடும் நெருக்கடி நிலைக்கு உள்ளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் கவனத்திற்கு இதனை செல்ல வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.





0 Comments