Subscribe Us

எருக்கலம்பிட்டி ஐக்கோனிக் பிறன்ஸ் அசோசியேசன் அமைப்பின் சாதனை இரத்த தான நிகழ்வு - படங்கள்


பாறுக் ஷிஹான்

எருக்கலம்பிட்டி ஐக்கோனிக் பிறன்ஸ் அசோசியேசன் அமைப்பின் பூரண அணுசரனையில் புத்தளம் எருக்கலம்பிட்டி நம்பிக்கையாளர் சபை அனுமதியுடன்  வட மேல் மாகாணத்தில்  இலவச இரத்ததானம் செய்யும் நிகழ்வில் சாதனை ஒன்று நிலைநாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் திகதி நடைபெற்ற இந்நிகழ்வில் சுமார் 200 க்கு திகமான குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு பங்களிப்பினை வழங்கி இருந்தனர்.

இந்நிகழ்விற்கு ஏ.ஜி.எம் அறுஸ் தலைமை தாங்கியதுடன் அனுபவம் வாய்ந்த வைத்தியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் வைத்தியர்களான கே.அஸ்பர்,திருமதி.முஸ்தா மீரா ஹில்மி ஆகியோர் முழு பங்களிப்பை வழங்கி இருந்தனர்.

இந்நிகழ்வில் பல்லின மக்களும் கலந்து கொண்டு தத்தமது பங்களிப்பை வழங்கியதுடன் இராணுவம்,பொலிஸாரும் கலந்து கொண்டனர்.

புத்தளம் எருக்கலம்பிட்டி முஸ்லீம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற இவ்விரத்த தான நிகழ்வில் சர்வமத தலைவர்கள் ஆசியுரை வழங்கியதுடன் காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.

இதன் போது புத்தளம் எருக்கலம்பிட்டி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவர் அல்ஹாஜ் ஏ.டபிய்யு றம்சீன் கலந்து கொண்டார்.

மேலும் புத்தளம் முஸ்லீம் மகா வித்தியாலம்,பொத்துவில்லு சிங்கள மகா வித்தியாலய மாணவர்களிற்கு கண் வைத்தியர்களால் கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு வட மேல் மாகாண  வரலாற்றில் முக்கிய நிகழ்வாக பதியப்பட்டுள்ளது.























Post a Comment

0 Comments