பாதுகாப்பு வசதி, விலை உயரும் வாய்ப்பு, போக்குவரத்து வசதி, அருகில் பள்ளிக்கூடம்.. இதுபோன்ற விஷயங்கள்தான் வீட்டை கட்டும்போதும் வாங்கும்போதும் முக்கியமானவையாக கருதப்படுகின்றன. அதைப்போலவே குடும்ப உறுப்பினர்களுக்கும் குழந்தைகளுக்கும் இணக்கமாக வீட்டை வடிவமைப்பதிலும் முக்கிய கவனம் செலுத்த வேண்டும்.
தனி அறைகள்
வீட்டில் குழந்தைகள் இருந்தால் லிவிங் ரூம் எனப்படும் ஹால் மற்றும் படுக்கையறைகள் தனித்தனியாக இருக்க வேண்டும். ஹாலில் இருந்து பார்க்கும்வகையில் படுக்கையறைகள அமைந்திருக்கக்கூடாது.
பொருட்களை வைப்பதற்கான இடம்
பெரியவர்களை போலவே குழந்தைகளும் பாதுகாக்க விரும்புகின்ற பொருட்கள் நிறைய உள்ளன. பொம்மைகள், விளையாட்டு சாதனங்கள், ஆடைகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு போதுமான இடம் வேண்டும்.
நீடித்து உழைக்கும் பொருட்கள்
குழந்தைகள் உள்ள வீடுகளில் நீடித்து உழைக்கும் பொருட்களையே உள் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டும். கையிலிருந்து தவறி விழுந்தால் எளிதில் உடைந்து போகின்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.
பாதுகாப்பு
பெரியவர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான வசதிகள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு ஏற்றவையாக இருப்பதில்லை. மாடிப்படிகளில் குழந்தைகள் ஏறும்போது தவறி விழுந்தால் அடிபடாதவாறு தரை விரிப்பை பயன்படுத்த வேண்டும். பால்கனிகளில் குழந்தைகள் ஏற முடியாதவாறு தடுப்புகளை அமைக்கவேண்டும்.
கூடுதல் இடம்
குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகிறபோது வீட்டில் அவர்கள் பயன்படுத்தும் இடத்தின் அளவு அதிகரிக்கும். அதற்கு ஏற்றவாறு அறைகள் அமைந்திருக்க வேண்டும். மேலும் கூடுதலாக குளியலறைகளையும் கழிவறைகளையும் அமைப்பது நல்லது. கூடுதலாக குளியலறை வசதிகள் இருந்தால் காலை நேரங்களில் வீட்டில் உள்ள அனைவரும் வெளியே கிளம்பும்போது பரபரப்பை தவிர்க்க முடியும்.


0 Comments