Subscribe Us

header ads

மஹிந்த ராஜபக்ச குடும்பத்தை கேலி செய்த ஊர்வலம் (படங்கள்)


நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பிரதான அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் கொழும்பு கெம்பல் பார்க் மைதானத்தில்  நடைபெற்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த மே தினக் கூட்டம் நடைபெற்றது.
இந்த மே தினக் கூட்டத்தில், பாரம்பரிய தேன் எடுத்தல், வேட்டையாடுதல், மீன்பிடி தொழில்களில் ஈடுபட்டுவரும் தமிழ் பழங்குடியினர் முதல் முறையாக கலந்துகொண்டனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கேலி செய்யும் முகமூடியுடன் ஆதரவாளர்களும், மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தை சிறையில் அடைப்பதைப் போன்ற காட்சிகளைக் கொண்ட ஊர்திகளும் காணப்பட்டன.
ஸ்ரீலங்காவின் சகல பகுதிகளில் இருந்தும் வாகனங்களில் வருகை தந்த ஆதரவாளர்கள், பொரளை கெம்பல் மைதானத்தில் ஒன்றுகூடினர். பெருமளவு பொலிஸாரும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
அதேவேளை, முன்னாள் காலஞ்சென்ற ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் நினைவு தினம் கொழும்பு புதுக்கடையில் அமைந்துள்ள பிரேததாஸவின் சிலைக்கு அருகில் நடைபெற்றது.




Post a Comment

0 Comments