தனது கைபேசியை சோதனை செய்ததற்காக கணவனின் விரல்களை மனைவி அறுத்த சம்பவம் ஒன்று பெங்களூரில் பதிவாகியுள்ளது.
பெங்களூரில் வாழும் தம்பதி சந்திரபிராஷ் சிங், சுனிதா சிங் இவர்களுக்கு திருமணம் நடந்து 7 வருடங்கள் ஆகுகிறது.
கடந்த 3 வருடங்களாக பெங்களூரில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தம்பதி இருவரும், காவற்துறையில் ஒருவருக்கொருவர் மாறி புகார் அளித்துள்ளனர்.
அதில், சந்திரபிரகாஷ் அளித்துள்ள புகாரில் மனைவியிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டும் என கோரியுள்ளார்.
மேலும் தனது மனைவி மிகக் பெரிய அளவில் கைபேசிக்கு அடிமை ஆகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 04 ஆம் திகதி தொழில் முடித்து வீடு திரும்பிய போது, வீட்டில் சமையல் செய்யாமல் கைபேசியிலே அதிக கவனமாக இருந்ததாகவும்,அப்போது ஏற்பட்ட வாக்கு வாதத்தில் வீட்டின் சமையலறையில் இருந்த கத்தியால் அவரது மனைவி அவரது விரல்களை அறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கு சென்று கிசிக்சை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளர்.
இது தொடர்பாக தம்பதியினரின் பெற்றோருக்கு காவற்துறையினர் தகவல் அனுப்பியுள்ளனர்.
தம்பதியினரை சமாதானப் பேச்சுவார்தையில் ஈடுபடுத்துமாறு அறிவுறுத்தியுள்ளனர்.


0 Comments