Subscribe Us

ரயில் வித்தை காட்டிய மாணவன் வைத்தியசாலையில் அனுமதி


ரயிலில் நேற்று பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வெளியில் எட்டிப் பார்த்தபோது, மின்கம்பத்துடன் முகம் அடிபட்டதில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தாரக டுலாஜ் எனற மாணவனே படுகாயமடைந்தவராவார்.
காங்கேசன்துறை தல்சவன விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு, நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments