ரோயல் யூத்ஸ் இன் 24 மணிநேர நிவாரண மற்றும் உதவிச்சேவை செயற்றிட்டம் அறிவிக்கப்பட்டதோடு தொடர்ந்து ரோயல் யூத்ஸ் இற்கு பல்வேறுபட்ட இடங்களில் இருந்து உதவிகளைக்கேட்டு அழைப்புக்களும் வெளிநாடுகளில் இருந்து அவர்களின் உறவினர்களைக் காப்பாற்றுமாறு அழுகுரல்களும் வந்தவண்ணமே இருந்தன.
அதிகாலை கட்டாரில் இருந்து ஒரு பெண்ணின் அழுகுரல். தான் கொழும்பு கொடிகாவத்தை பிரதேத்தை சேர்ந்தவர் எனவும் இப்போது கட்டாரில் வசிப்பதாகவும், தனது வயது முதிர்ந்த தாயும் தந்தையும் கொடிகாவத்தை வீட்டில் வசித்ததாகவும், கடந்த நான்கு நாட்களாக தனது தாயின் நிலைபற்றி தெரியாது எனவும் தெரிவித்தார்.
"வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட தினத்திலிருந்து எனது தாய் தந்தையிடமிருந்து எந்தவொரு அழைப்பும் கிடைக்கவில்லை, அவர்களின் நிலை என்னவாயிற்று என்று தெரியாமல் துடித்துக்கொண்டிருக்கிறேன். அவர்கள் உயிரோடு இருக்கிறார்களா என்ற செய்திகூட எனக்கு கிடைக்க வழியில்லாமல் இருக்கிறது. நான் என் தாயின் முகம் காணவேண்டும். எனக்கு உதவி செய்யுங்கள்" என்று தேம்பித்தேம்பி அழுதார்.
அதிகாலை நேரம் என்பதையும் பொருட்படுத்தாமல் உடனடியாக ரோயல் யூத்ஸ் செயலில் இறங்கியது. அந்தப்பெண்மனியிடம் அவரின் பெற்றோர் வசிக்கும் வீட்டின் முகவரியையும் வீட்டுக்கான வழியையும் பெற்றுக்கொண்டு அவ்விடம் நோக்கி புறப்பட்டார்கள் எமது வாலிபர்கள்.
குறித்த பிரதேசம் இன்று அதிகாலை சுமார் ஐந்து அல்லது ஆறு அடி தண்ணீரால் காணப்பட்டது. கடற்படை வீரர்களால் மக்கள் செல்வதற்கு அந்தப்பிரதேசம் தடைசெய்யப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் அதைமறந்து எமது வாலிபர் உயிரைப்பணயம் வைத்து வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் அந்தப்பெண்ணின் தாய் வசிக்கும் வீட்டைத்தேடி கழுத்துவரை மூழ்கிய நீரில் நடக்கலானார். அவர் உயிரோடு திரும்பவேண்டும் என்ற பிரார்த்தனையோடு நாங்கள் இருக்க சுமார் 35 நிமிடங்கள் வரைக்கும் எந்தவித தொடர்பும் அவரிடம் இருந்து எங்களுக்கு கிடைக்கவில்லை. இறைவனின் நாமத்தை உச்சரித்தவாறே இருந்தோம்.
சில நிமிடங்கள் கழித்து தூரத்தில் அந்த வாலிபர் வருவதைக்கண்டு உள்ளம் அமைதியடைந்தோம். அவரிடமிருந்து எங்களுக்கும் அந்தப்பெண்மணிக்கும் அந்த அதிகாலைப்பொழுது இனிப்பான செய்தியே கிட்டியது.
மின்சாரம் தடைப்பட்டதன் காரணமாக தொலைபேசி நான்கு நாட்களாக ஓப் செய்யப்பட்டு இருந்ததாகவும் வீட்டைச்சுற்றி தண்ணீர் ஒன்பது அடி உயரத்தில் காணப்பட்டதாகவும். வெளியில் வர பயந்ததாலேயே நான்கு நாட்கள் தானும் கணவனும் மேல்மாடியிலேயே இருந்ததாகவும் அந்தத்தாய் அழுதுபுலம்பியுள்ளார்.
பின்னர் எமது வாலிபரின் தொலைபேசியில் இருந்து வீடியோகோல் மூலம் தனது மகளுக்கு தாயின் முகத்தையும் தாய்க்கு மகளின் முகத்தையும் காணச்செய்துவிட்டு அவர்கள் இருவரின் முகத்திலும் ஆனந்தக்கண்ணீரை காணச்செய்துள்ளார் எமது துணிச்சலான வாலிபர் Afzan Nazrudeen. அல்லாஹ் அவருடைய ஈருலக வாழ்விலும் ஈடேற்றத்தை தரவேண்டும்.
அந்தப்பெண்மனியின் தாய்க்கு சிலநாட்களுக்குத் தேவையான சில உதவிகளையும் செய்துமுடித்துவிட்டு தொடர்ச்சியாக 24 மணிநேர உதவி சேவையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள் ரோயல் யூத்ஸ் வாலிபர்கள்.
குறிப்பு:இந்த புகைப்படம் மற்றும் அனுபவம் சம்மந்தபட்டவர்களின் அனுமதி பெறப்பட பின்பே பதிவு செய்யப்படுகின்றது
-Royal Youths-


0 Comments