Subscribe Us

திருகோணமலையில் பாடசாலைக்கு செல்லாமல் இருப்பவர்களே கவனம்…! -படங்கள்


திருகோணமலை-மொறவெவ பிரதேசத்தில் பாடசாலைக்கு அனுப்பாமல் சிறார்களை வயல் வேலைகளுக்காக அழைத்துச்செல்லும் பெற்றோர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நேற்று மாலை நடைபெற்ற சிவில் பாதுகாப்பு குழு கூட்டத்தில் பொலிஸாரிடம் கிராமத்திலுள்ள புத்திஜீவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
மொறவெவ பிரதேசத்திற்கான சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டம் பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க தலைமையில் நடைபெற்ற போதே கிராமத்திலுள்ள புத்திஜீவிகள் இவ் வேண்டுகோளை விடுத்தனர்.
தெவனிபியவர-ரொட்டவெவ மற்றும் அத்தாபெந்திவெவ கிராமங்களில் கேரளா கன்சா-சட்ட விரோதமான சீல் சாராயம் போன்ற போதைப்பொருட்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அதனால் பாடசாலை செல்லாமல் சிறார்கள் வயல் வேலைகளுக்காக அழைத்துச்செல்லப்படுவதினால் போதைப்பொருள் பாவனையை பழகி வருவதாகவும் அதனால் சமூக சீர் கேடுகள் அதிகரித்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
சிறார்களின் எதிர்கால நலன் கருதி பாடசாலைக்கு அனுப்பாமல் வேளைக்கு அழைத்துச்செல்லும் பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் இரகசிய பொலிஸாரை ஈடுபடுத்தி போதைப்பொருளை முற்றாக ஒழிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தனர்.
இக்கூட்டத்தில் கிராம உத்தியோகத்தர்கள்- கிராமத்திலுள்ள புத்திஜீவிகள்- சமய தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments