இலங்கையை பாதித்திருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட போதிலும் எந்தவித அரச அதிகாரிகளுக்கும் கவனத்தில் படாத இடங்கள் இருப்பின் அதுபற்றி 1919 தொலைபேசி அழைப்பின் மூலம் ”ஜனாதிபதியிடம் கூறுங்கள்” வேலைத்திட்டத்திற்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதற்கமைய கடந்த (17) இரவு 8 மணிக்கு பின்னரான 18 மணித்தியாலங்களுக்குள் 1919 தொலைபேசி அழைப்பின் ஊடாக 1200 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் அவ்வனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளரின் நேரடி அறிவுறுத்தலுக்கமைய சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தெரியப்படுத்தி தேவையான நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ள நிலைமை தனியும் வரை இச்சேவை தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.


0 Comments