பிறந்து 10 நாளே ஆன குழந்தையை ஓ.எல்.எக்ஸ். மூலம் விற்க முயன்ற தந்தை போலீசார் கைது செய்தனர். தென்கிழக்கு பிரேசிலில் உள்ள பேலோ ஹரிசான்டி நகரை சேர்ந்தவர் அபிமாயல் கோஸ்டா. இவர் மனைவி பியாமா அபரேசிடாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் பிறந்து 10 நாட்கள் ஆன அந்த குழந்தையை ஓ.எல்.எக்ஸ். விற்பதற்காக விளம்பர பக்கத்தில் விளம்பரம் கொடுத்திருந்தார்.
அந்த பக்கத்தில் குழந்தையின் படத்தை போட்டு அதில், ‘நான் எனது 10 நாட்களே ஆன ஆண் குழந்தையை விற்பனை செய்கிறேன். குழந்தை ஆரோக்கியத்துடன் உள்ளது’ என கூறியிருந்தார். இது ஒரு அசத்தும் முதலீடு, விலை குறித்து பேசி முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் அவரை கண்டுபிடித்து விசாரித்தனர். முதலில் மறுத்த கோஸ்டா பின்னர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால், இதனை வேடிக்கையாக செய்ததாக கூறி சமாளித்துள்ளார். இதை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து குழந்தையின் தாயார் பியாமா கூறுகையில் இதைக் கேட்டதும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்ன காரணத்திற்காக எனது கணவர் இதை செய்தார் என்று எனக்கு தெரியவில்லை’ என தாயார் கூறியுள்ளார்.


0 Comments