இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் 24.4.2016 நாள் மதியம் அன்று இரண்டரை மாத சிறை வாழ்கைக்குப் பிறகு திமா அல் வாவி என்ற 12 வயது பலஸ்தீன் சிறுமியை விடுதலை செய்துள்ளது.
ஆக்கிரமிப்பு பாலஸ்தீனப் பகுதியில் மேற்கு கரையின் வடக்கே உள்ள துல்காரிம் பகுதியின் ஜபரா இராணுவ சோதனைச்சாவடியில் விடுதலை செய்தனர். அங்கே அந்த சிறுமியின் குடும்பத்தவர்களும், பாலஸ்தீன மக்களும் அவளை மீட்டனர் .சிறைவாசி மற்றும் முன்னாள் சிறைவாசிகளின் கமிட்டி தலைவர் இசா கராகேவும் துல்காரிம் பகுதியின் மேயர் அஸ்ஸாம் அபூபக்கரம் அல் வாவியை மகிழ்வோடு வரவேற்றார்கள்.
அல் கலீலின் வடக்குப்பகுதியில் உள்ள அல் ஹலூல் இளம்பெண் திமா அல் வாவி அவர்களின் சொந்த ஊர் ஆகும் .பள்ளிக்கு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுமி அல் வாவியை பிப்ரவரி 9 ம் தேதி அன்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு குழு கடத்திச் சென்றது. தனது கையில் கத்தியை வைத்திருந்ததாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகளுக்கு எதிராக அதை பயன்படுத்த முயற்சி செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டாள்.
.
இஸ்ரேலிய நீதிமன்றம் இந்த அப்பாவி சிறுமியை 4 மாதம் சிறை தண்டனையும் 2,500 U.S டாலர்கள் அபராதம் சுமத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ரிப்போர்ட் - அபூஷேக் முஹம்மத்


0 Comments